Categories: latest news throwback stories

காதல் படுத்திய பாடு… ஷங்கரை இப்படி சிந்திக்க வைத்து விட்டதே!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் பாலாஜி சக்திவேல். அவர் இயக்கிய காதல் திரைப்படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. அவர் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தை ஷங்கர் எந்த சூழலில் தயாரித்தார் என்று பார்ப்போமா…

பாலாஜி சக்திவேல்: காதல் படத்தின் கதையைப் பற்றி பல முறை ஷங்கரிடம் பாலாஜி சக்திவேல் சொல்லி இருக்கிறார். ஒருமுறை அப்படிப் பேசும்போது ஒரு ரெண்டு கோடி ரூபாய் கொடுங்க. பிரம்மாதமா படத்தை எடுத்து பணத்தை திருப்பிக் கொடுத்துடறேன்னாராம்.

அந்த டீல்: அதுவரைக்கும் ஷங்கருக்குப் படம் தயாரிக்கணும்கற எண்ணமே இல்லை. ஷங்கருக்குக் காதல் கதை ரொம்பவே பிடித்து இருந்தது. அதனால பாலாஜி சக்திவேல் சொன்ன அந்த டீலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். அந்தக்கால கட்டத்தில் தனக்கு என ஒரு அலுவலகத்தை வாங்குவதற்காகக் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து இருந்தார் ஷங்கர்.

பாலாஜி சக்திவேல் படம் எடுக்கணும்னு பணம் கேட்கிறார். கொடுப்போம். திரும்ப பணம் வந்தால் ஆபீஸ் வாங்கிக்கலாம். இல்லன்னா விட்டுருவோம் அப்படிங்கற எண்ணத்துல தான் காதல் படத்தைத் தயாரித்தார் ஷங்கர்.

நிச்சயமா ஜெயிக்கும்: அதே நேரம் காதல் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து நான் என்ன முதலீடு போட்டேனோ அதை விட அதிக லாபத்தை அந்தப் படம் பெற்றுத் தந்தது. அதன்பிறகு ஒரு அலுவலகத்தை வாங்கினேன். காதல் படத்தைப் பொருத்த வரைக்கும் அது லாபகரமாக அமைந்தது என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதை நிச்சயமா ஜெயிக்கும்னு நான் நினைச்சிருந்தேன்.

அந்த நினைப்பு ஜெயிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் ஷங்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

காதல்: 2004ல் பாலாஜி சக்திவேல் இயக்க ஷங்கர் தயாரித்த படம் காதல். பரத், சந்தியா, சுகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜோஷ்வாஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். பூவும் படிக்குது, இவன்தான், தண்டட்டி கருப்பாயி, தொட்டுத் தொட்டு, உனக்கென இருப்பேன், ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v