latest news
Flash Back: விளையாட்டாகப் பேசிய கதை… விஸ்வரூப வெற்றி… அட அது ஸ்ரீதர் படமா?
Published on
இயக்குனர் ஸ்ரீதருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் சித்ராலயா கோபு. இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஒருநாள் அவர்கள் இருவரும் மெரினா கடற்கரையில் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது சித்ராலயா கோபு ஸ்ரீதரிடம் நீங்க ஏன் ஒரு நகைச்சுவை படத்தை எழுதி இயக்கக்கூடாது? என கேட்க அதற்கு ஸ்ரீதர் இப்படி பதில் சொல்கிறார். கல்யாணப்பரிசு, போலீஸ்காரன் மகள், நெஞ்சில் ஓர் ஆலயம் என உருக்கமான கதைகளையே எழுதி இயக்குகிறேன். அப்படிப்பட்ட நான் நகைச்சுவைப்படத்தை எடுத்தா ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என கோபுவைப் பார்த்து ஸ்ரீதர் கேட்டார்.
அப்போது கோபு, உங்களைப் பொருத்தவரைக்கும் காதல் கை வந்த கலை. அந்தக் காதலோடு கொஞ்சம் நகைச்சுவையையும் கலந்து கொடுத்தா நிச்சயம் அது வெற்றிப்படமாகத் தானே அமையும்னு ஸ்ரீதரைப் பார்த்து கோபு கேட்டார். இந்த உரையாடலுக்குப் பிறகும் அவர்கள் 3 மணி நேரம் வரை மெரினா பீச்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போதுதான் காதல் கதையோட பல காட்சிகளை ஸ்ரீதர் சித்ராலயா கோபுவிடம் சொன்னார்.
ஸ்ரீதர் அப்படி சொன்ன காட்சிகள் இடையே நகைச்சுவைக் காட்சிகளை எங்கெங்கே புகுத்தலாம்னு சித்ராலயா கோபு சொன்னார். இப்படி உருவானதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை. நண்பர்கள் இருவரும் விளையாட்டாகப் பேசிய விஷயம் எப்படிப்பட்ட வெற்றிக்கு வித்திட்டதுன்னு பாருங்க. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
1964ல் ஸ்ரீதர் இயக்கிய படம் காதலிக்க நேரமில்லை. கதையை ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் இணைந்து எழுதினர். ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், டிஎஸ்.பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...
TVK Vijay: தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களை...
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...