latest news
இயக்குனருக்குத் திருமணம்… கேட்கும் முன்பே உதவி செய்த விஜயகாந்த்!
Published on
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் டிவி சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியுடன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
என்னுடைய திருமணம் நடக்கும்போது நான் ஒரு சாதாரண இயக்குனர்தான். 1988ல் திருமணம் நடந்தது. அதுவரை நான் இயக்கிய படம் ஒண்ணு கூட வெளியாகல. கல்யாணம் முடிஞ்ச சில நாளுக்குப் பிறகுதான் என் முதல் படமான உரிமைகீதமே வெளியானது.
ஆனாலும் சென்னையில் நடந்த எனது திருமண வரவேற்புக்கு முதல் ஆளாக வந்து நின்னு நிகழ்ச்சிக்கு எல்லாரையும் வரவேற்றவர் விஜயகாந்த்தான். அதே மாதிரி நிகழ்ச்சி முடிஞ்சு கடைசி ஆளாக போனவரும் அவர்தான். அவர் அப்படிச் சொல்லும்போது அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே பாடல் ஒலித்தது. பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டார் இயக்குனர்
பின்னாளில் விஜயகாந்தை வைத்து மிகப்பெரிய ஹிட் படமான சின்னக்கவுண்டரை இயக்கினார்.அந்தப் படத்துக்காக இந்தப் பாடலை எழுதியவர் இவர்தான். எனது திருமணம் பண்ணைபுரம் என்ற ஊரில் நடந்தது.
ஒரு சாதாரண உதவி இயக்குனரான எனக்குப் பெண்ணைக் கொடுத்ததே பெரிய விஷயம். ஏன்னா அதுவரைக்கும் நான் இயக்கிய படமே ரிலீஸ் ஆகல. இந்த நேரத்தில் எப்படியோ என் நண்பர்கள் மூலமாக திருமணமும் நிச்சயமாகி விட்டது.
மதுரையில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறது பண்ணைபுரம். அதுதான் பெண்ணின் ஊர். போக்குவரத்துக்கு என்ன செய்வதுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். பஸ்ல போகணும்னா 3 மணி நேரம் ஆகும். அங்கு தான் திருமணம். என்ன செய்யலாம்னு ரொம்ப யோசித்தேன். அப்போது நாலைந்து கார் வந்து நின்றது. ஒரு நண்பர் சொன்னார்.
விஜயகாந்த் சார் அனுப்பி வச்சிருக்காங்க. டிரைவர்களையும் சேர்த்தே அனுப்பிருக்காங்க. நாம எத்தனை நாள் தேவையோ பயன்படுத்தலாமாம். அப்படின்னு அவர் சொன்னதும் உதயகுமாருக்குக் கண்ணீர் தாரை தாரையாக வந்து விட்டது. அப்போது அவர் சொன்னது இதுதான்.
விஜயகாந்த் சார் இந்த ஏற்பாட்டை செய்வதைக் கண்டு அசந்தே போனேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்க. ஒரு பிரபல நடிகர் யாராவது இவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவிகள் செய்வார்களா? நான் பெரிய இயக்குனர்னா கூட பரவாயில்லை. ஒரு படம் கூட கொடுக்காத சாதாரண உதவி இயக்குனர். எதையுமே சாதிக்கவும் இல்லை.
ஆனா எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் கேட்குறதுக்கு முன்னாடியே உதவிகள் செய்துள்ளாரே விஜயகாந்த் சார். அவருக்கு நிகர் யாருமே இல்லை. எத்தனையோ பேருக்கு உதவிகளை வெளியே தெரியாமலேயே செய்துள்ளார். ஆபாவாணன், செல்வமணி, அரவிந்தராஜ் என நாங்க எல்லாரும் திரைப்படக்கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு மட்டும் அல்லாமல் இன்னும் பலருக்குத் திரையுலகில் வாய்ப்பு கொடுத்ததே அவர்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...