latest news
உங்களுக்கு அந்த எண்ணம் இல்லையான்னு கேட்ட சில்க்… இயக்குனர் சொன்ன டக்கர் பதில்!
Published on
குடும்ப்படங்களைத் தயாரித்து சூப்பர்ஹிட் கொடுக்கும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.சேகர். இவர் இயக்கிய நீங்களும் ஹீரோதான் படத்தில் நடிகை சில்க் நடித்துள்ளார். அந்தவகையில் அவர் அவரைப் பற்றி பல ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
டான்ஸ்காரி: சில்க் ஸ்மிதாவோட கேரக்டர்ல பெரும்பாலும் டான்ஸ்காரிதான். நீங்களும் ஹீரோதான் படத்துக்கான சூட்டிங் ஒரு கிராமத்துல நடந்தது. அங்க தெரிஞ்சவங்க வீட்டுல சில்க் ஸ்மிதாவைப் பாதுகாப்பா தங்க வச்சோம். அசிஸ்டண்ட் டைரக்டர், மேனேஜர் எல்லாரும் ஒரு இடத்துல இருந்து பேசுறோம்.
ஐடியா இருக்கா: ஊருல பெரிய மனுஷங்க எல்லாரும் அங்க வந்து எங்க கூட பேசுறாங்க. டைரக்டர் சார் யாருன்னு எல்லாம் கேட்குறாங்க. நல்லா பேசுறாங்க. எல்லாம் பணக்காரங்க தானே. அடுத்த படத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு அசிஸ்டண்ட் டைரக்டர்கிட்ட நல்லா பேசுனாங்க. என்ன சார் படம் எதுவும் எடுக்கணும்னு ஐடியா இருக்கான்னு கேட்டாங்க.
சில்க்ஸ்மிதாவுக்கு என்ன ரேட்?: அப்போ சாருக்கிட்ட நிறைய கதை இருக்குன்னு என்னைப் பற்றி அசிஸ்டண்ட் எல்லாம் சொன்னாங்க. அதெல்லாம் ஓகே. சில்க்ஸ்மிதாவுக்கு என்ன ரேட்னு கேட்டாங்க. ஒருவேளை படத்துல நடிக்கறதுக்குன்னு நினைச்சேன்.
ஜாலியா இருக்கணும்: ஒரு டேட்டுக்கு என்ன பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆசைப்படுறாங்க. என்னடா மாமா வேலைக்குக் கூப்பிடுறாங்க போலன்னு நினைச்சேன். அப்புறம் அசிஸ்டண்டைக் கூப்பிட்டு இவங்க எல்லாம் பண்ணையாருங்க. சூட்டிங் வந்த இடத்துல ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அப்படின்னு திட்டிட்டு நான் போயிட்டேன். அப்புறம் மேனேஜர் மூலமா வருது. அப்பவும் திட்டி விட்டேன்.
பிராக்கெட் போட்டுப் பேசுவாங்க: சில்க் டான்ஸ் ஆடுறவ தானே. கூப்பிடலாம். ஹீரோயினைக் கூப்பிட்டா ஹீரோ அடிப்பாருன்னு பயப்படுறான். இதை எல்லாம் படத்துல வச்சிட்டேன். நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி சொன்னேன். என் படத்துல ரொம்ப சின்சியர். ஒரு முறை எங்கிட்ட ‘ஏன் சார் எல்லா ஆளுகளும் வேற மாதிரி நம்மை வந்து பிராக்கெட் போட்டுப் பேசுவாங்க.
அந்த மாதிரி எண்ணம்: எங்க போறதுன்னு கேட்பாங்க. பக்கத்துலயே டைரக்டர், புரொடியூசர் ரூம் போட்டுக்குவாங்க. நீங்க என்ன எல்லாருக்கிட்டயும் ப்ரீயா பழகுறீங்களே. உங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி எண்ணம் இல்லையா’ன்னு கேட்டது. ‘இல்லம்மா. வீட்ல பொண்டாட்டி இருக்கு. மற்ற எல்லாரையும் சகோதரி மாதிரி நினைச்சிக்குவேன்’னு சொன்னேன். அப்புறம் என்னைக் கும்பிட ஆரம்பிச்சிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...