Connect with us

latest news

அந்த நேரத்துல கூட நான் கஷ்டப்படக்கூடாதுன்னு விஜய் நினைச்சாரு… கஞ்சா கருப்பு ஃபீலிங்…!

விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்றும் அறிவித்து விட்டார். தொடர்ந்து அரசியலில் முழுநேரமாக இறங்க உள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதற்கான பணிகளை இப்போது முடுக்கி விட்டுள்ளார்.

கட்சிப்பணிகள் ஒருபுறம் வேகமெடுக்க இன்னொரு புறம் தனது கடைசி படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஜனநாயகன் படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 9ல் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்துடன் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாவதாக இருந்தது.

ஆனால் இப்போது அமலாக்கத்துறை ரெய்டின் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் என்கிறார்கள். தொடர்ந்து விஜய் படம் தனித்து வந்து வசூலை வாரிக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் முன்பு ஒரு முறை கஞ்சா கருப்புக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்துள்ளார். அந்தத் தகவலை கஞ்சாகருப்புவே பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

அழகிய தமிழ் மகன் படத்தின்போது நான் போன்ல கத்திக்கிட்டு இருந்தேன். விஜய் சார் என்னைப் பார்த்துக்கிட்டே இருந்தார். என்ன பிராப்ளம்னு கேட்டார். அதற்கு நான் ஒரு படத்துக்கு டேட் கொடுத்தேன். அவங்க ஒன்றரை லட்ச ரூபாய் மேன்ஷனுக்கு கட்டிட்டாங்களாம். அதைக் கொடுங்கன்னு கேட்குறாங்கன்னு சொன்னேன். நான் சென்னைக்கு வந்து அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி அந்த ஒன்றரை லட்ச ரூபாயை விஜய் சார் கொடுத்து விட்டார்.

ஏன்னா அவர் கஷ்டப்படுற மனுஷன் நமக்காக தானே டேட் பிரச்சனை அவருக்கு. எந்தப் படக்குழு மீது தப்புன்னு தெரியாது. இவருடைய சம்பளத்தைப் பிடிச்சிடக்கூடாது என்று அந்த பணத்தை அவர் மேன்ஷனுக்கு கட்டிட்டார் என்கிறார் கஞ்சா கருப்பு.

தேவர்மகன் படத்தை இயக்கிய பரதன் 2007ல் விஜய் நடிக்க அழகிய தமிழ் மகன் என்ற படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயா, நமிதா, சந்தானம், ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் கஞ்சா கருப்புவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top