latest news
சத்தியம் செய்த இரட்டை இசை அமைப்பாளர்கள்… பிரிந்தது எப்படி? அட எம்எஸ்வி. கதையா இது?
Published on
நாம ரெண்டு பேரும் எந்தக் காலகட்டத்திலும் பிரியவே கூடாது. ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று கோவை மாரியம்மன் கோவிலில் சத்தியம் செய்தார்கள். அதற்குப் பிறகுதான் திரைப்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார்கள் அந்த இரட்டையர்கள். அந்த இசை அமைப்பாளர்கள் தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும்.
கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் 1964ல் நாகேஷ், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தின்போது தான் இவர்களது நட்பில் முதல் விரிசல் விழுந்தது. அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் காட்சி அந்தப் படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல் காட்சியில் எப்படி புதுமையைப் புகுத்தலாம் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். அதனால் இந்தப் பாடல் எப்படிப் பதிவாகிறது? அதற்குப் பின்னால் எப்படிப் படமாக்கப்படுகிறது என்றெல்லாம் அந்தப் படத்தில் காட்டினார்கள்.
அந்தப் பாடல் படமாக்கும்போது எம்எஸ்.வி. கோட், சூட் போட்டுக்கிட்டு அந்தப் பாடலைகக் கன்டக்ட் செய்வது போல காட்டினார்கள். இதைப் பார்த்ததும் டி.கே.ராமமூர்த்திக்கு திடுக்கென்று இருந்தது. நாமும் தானே அந்தப் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறோம்.
நாம இல்லாம இவர் மட்டும் கன்டக்ட் செய்வதாகக் காட்டினால் இவர் தனியா இசை அமைத்ததாக அல்லவா ரசிகர்கள் நினைப்பாங்க? என்று டி.கே.ராமமூர்த்தி மனம் வருந்தினார். ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்து கொண்டு இருக்கும் இருவரில் ஒருவருக்கு மட்டும் வருத்தம் இருந்தா சினிமாவில் சும்மா விடுவார்களா?
தினமும் அதைப் பத்திப் பேசிப் பேசி சிறு புண்ணாக இருந்ததை ரணமாக ஆக்கி விட்டார்கள் திரையுலக நண்பர்கள் சிலர். அதன் காரணமாகத்தான் எம்எஸ்வி.கிட்ட இனிமே நான் தனியா இசை அமைக்கிறேன் என டிகே.ராமமூர்த்தி சொன்னார். அன்னைக்கு இருந்த சூழ்நிலையில நாம என்ன சொன்னாலும் ராமமூர்த்தி கேட்க மாட்டார் என்பது எம்எஸ்வி.க்கு தெரிந்தது.
அது மட்டும் இல்லாம இந்தப் பிரிவு நீண்ட நாள் நீடிக்காது. ஒரு காலகட்டத்தில் நிச்சயமாகத் திரும்பி வருவார்னு நினைத்தார். அதனால்தானோ என்னவோ சரி. நீங்க தனியா இசை அமைச்சிக்கோங்கன்னு சொல்லி விட்டார். சிவாஜியின் பணம் படத்தில் தான் டி.கே.ராமமூர்த்;தி முதன் முதலாகத் தனியாக இசை அமைத்தார். தொடர்ந்து எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் வரை டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்து தன் இசைப்பயணத்தை முடித்துக் கொண்டார்.
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
Karur Vijay: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் சென்றிருந்த போது அவர்...
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...