Connect with us

latest news

கோபத்தில் நக்கலடித்த சிவாஜி!. வாலி கொடுத்த சூப்பர் ரிப்ளே!. ஒரு பிளாஷ்பேக்!…

கவிஞர் வாலி எம்ஜிஆர், சிவாஜி என தமிழ்த்திரை உலகில் இருபெரும் ஜாம்பவான்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர்ஹிட் தான். சிவாஜி படத்திற்கு இவர் பாடல் எழுத வந்தது எப்படின்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

வாலி, ‘கற்பகம்’ என்ற படத்தில் பாடல் எழுதினார். இதுதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் வாலி. இருந்தாலும் சிவாஜிக்கு எழுதிய பாடல்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.

1965ல் சிவாஜி, தேவிகா, பாலாஜி நடிப்பில் வெளியான படம் அன்புக்கரங்கள். இந்தப் படத்தை இயக்கியவர் கே.ஷங்கர். ஆர்.சுதர்சன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு வாலி தான் பாடல்கள் எழுதினார். இந்தப் படத்தின் பாடல் பதிவு முடிந்தநிலையில் சிவாஜி அதைக் கேட்க வந்தார்.

அப்போது அவருக்கு ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ பாடலைப் போட்டுக் காட்டியுள்ளனர். சிவாஜி இந்தப் பாடலைக் கேட்கையில் வாலி வெற்றிலைப்பாக்கு போட்டு குதப்பிக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்ததும் இவன் எம்ஜிஆர் படத்துக்கு பாட்டு எழுதுறவன். இப்போ வாயில வெத்தலைப்பாக்குன்னு கடுப்பாகிவிட்டாராம்.

பாடலைக் கேட்டு முடித்ததும் நேராக வாலியிடம் சென்று ‘பாட்டு நல்லாருக்கு. காபி சாப்பிட்டீங்களா’ன்னு கேட்டுள்ளார். ‘அதெல்லாம் ஆச்சு’ன்னாராம் வாலி. அப்புறம் சிவாஜி கொஞ்சம் கிண்டலாக ‘வெத்தலைப்பாக்கு போட்டா தான் பாட்டு வருமா..?’ன்னு கேட்டுள்ளார்.

anpukarangal

anpukarangal

அதற்கு வாலியும் கிண்டலாக ‘அது போடலைன்னா வாசனை வரும்’னாராம். உடனே ‘அப்படின்னா அந்தப் பழக்கம் எல்லாம் உண்டா..?’ன்னு கேட்டுள்ளார் சிவாஜி. அதற்கு வாலி, ‘சிக்கன் சாப்பிடணும்னா அது இல்லாம இருக்குமா…’ன்னு கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் சிவாஜி அவருடன் நட்பாகி விட்டாராம். அதன்பிறகு சிவாஜி பிலிம்ஸ் சார்பில் தயாரித்த பல படங்களுக்கும் பாடல் எழுதியது வாலிதானாம். வாலிபக்கவிஞர் வாலி என்றால் சும்மாவா? இவர் 4 தலைமுறை வரை பாடல் எழுதி அசத்தியுள்ளார். அந்தப் பெருமை இவரையேச் சேரும்.

Continue Reading

More in latest news

To Top