Connect with us

latest news

நான் சொல்றததான் கேட்கணும்.. டி.எம்.எஸ்ஸை மிரட்டிய இளையராஜா.. பிரச்சினைக்கு இதுதான் காரணமா?

எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுக்கு தன் குரலின் மூலம் அழகான இனிமையை கொடுத்தவர் டி.எம். சௌந்தராஜன். எம்ஜிஆர் மாதிரி பாடுவதிலும் சிவாஜி மாதிரி பாடுவதிலும் சிறந்த பாடகர் டி.எம்.எஸ். ஆறு தலைமுறைகளுக்கும் பாடியவர். தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும் பாடலாக இருப்பது டி.எம். எஸ்ஸின் பாடல்தான்.

அரை நூற்றாண்டாக தன் பாடலால அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தார். சிவாஜி , எம்ஜிஆர் மட்டுமில்லாமல் ஜெமினி, எஸ்.எஸ். ஆர், முத்துராமன், ரவிச்சந்திரன், ரஜினி , கமல் என பல நடிகர்களுக்கு குரல் கொடுத்தார். காதல் ,வீரம், சோகம் , பக்தி என எல்லா எல்லைகளையும் தொட்டது அவர் பாடல்கள். எம்.எஸ்.வி முதல் அந்த கால இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய டி.எம்.எஸ் இளையராஜாவுடனும் இணைந்தார்.

அவரது இசையில் பாடல்களை பாடினாலும் இடையில் இருவரும் கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்தனர். இதை பற்றி டி.எம்.எஸ்ஸின் மகள் ஒரு பேட்டியில் கூறினார். ஒரு சமயம் இளையராஜா டி.எம்.எஸ்ஸை பார்த்து ‘ நான் என்ன சொல்கிறேனோ அப்படித்தான் பாட வேண்டும். நான் அப்படி பாடியிருக்கிறேன். இப்படி பாடியிருக்கிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது. நான் சொல்றத கேட்டு பாடணும்’ என சொல்லிவிட்டாராம்.

அதிலிருந்து டி.எம்.எஸ் இளையராஜா இசையில் பாடவே இல்லையாம். அதுமட்டுமில்ல இப்படி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட காரணமே டி.எம்.எஸ்ஸுக்கு இருந்த காது பிரச்சினைதானாம். அவர் எந்த பாடலை பாடினாலும் ஹை பிட்ச்சில்தான் பாடுவார். அதனாலேயே அவருடைய காது கேட்காமல் போய்விட்டதாம். அதனால் இளையராஜா ஒன்னு சொல்ல டிஎம்எஸ் ஒன்னு புரிஞ்சுக்க இப்படித்தான் பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது என அவரது மகள் அந்த பேட்டியில் கூறினார்.

மேலும் பானுமதியை பார்த்தாலும் டி.எம்.எஸ் பயப்படுவாராம். அதாவது இவருக்கு முன் யாரெல்லாம் பெரிய பெரிய பாடகர்களாக இருந்தார்களோ அவர்களுக்கு கொஞ்சம் பயப்படுவாராம் டி.எம்.எஸ். அதுமட்டுமில்லாமல் இவருடன் பாடிய சுசீலா அடுத்த தலைமுறையினருக்கு பல பாடல்களை பாடியிருக்கிறார். அதாவது 80களில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார் சுசீலா.

ஆனால் டி.எம்.எஸ் 80களில் பாடவில்லை. அதற்கு காரணம் இவருடைய குரலுக்கு ஏற்ற நடிகர்கள் இந்த காலத்தில் வரவில்லை. அதனால் ஒதுங்கிவிட்டார் என டி.எம்.எஸ் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top