Connect with us

latest news

இளையராஜா அந்த ஒரு விஷயத்துக்காக சம்பளமே வாங்காம இசைத்தாராம்… என்ன படம்னு தெரியுமா?

இளையராஜா என்றாலே அவருக்கு இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் பலவிதமான அடைமொழிகள் உண்டு. தமிழ்சினிமா உலகில் இசையால் அவர் செய்த அபார சாதனைகள் பலப்பல உண்டு. இன்று வரை இவரது பாடல்களைக் கேட்டாலே அது மனதுக்கு இதமாக இருக்கும். எவ்வளவு துயரமான நிலை நமக்கு வந்தபோதும், இளையராஜாவின் பாடலைக் கேட்டாலே போதும். அது நமக்கு பல தருணங்களில் மாமருந்தாகவும் அமைவதுண்டு.

பிரதிபலன் கருதாமல் இசைஞானி இவ்வளவு அற்புதமான இசையைத் தருகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய இந்த இசைக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தகும் என்பதே அவரது தீவர ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

80களில் இவர் இசை அமைத்த பாடல்களைக் கேட்டால் நம் செவியில் தேன் வந்து பாய்வது போலவே இருக்கும். அந்தவகையில் அப்போது அவர் பீக்கில் இருந்த காலகட்டம். அப்படி என்றால் அவர் தான் அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும். ஆனால் ஒரு படத்துக்கு சம்பளமே வாங்காமல் இசை அமைத்துள்ளார். அது என்ன படம்? என்ன காரணத்துக்காக அப்படிச் செய்தார்னு பார்ப்போம்.

1981ல் இவர் இசை அமைத்த பன்னீர் புஷ்பங்கள் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் சுரேஷ், சாந்தி, பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, அர்ச்சனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குத் தான் இளையராஜா சம்பளமே வாங்காமல் இசை அமைத்துள்ளார். ஏன்னா இந்தப் படத்தின் இயக்குனர்கள் சந்தான பாரதி, பி.வாசு. இவர்கள் தான் இளையராஜாவுக்கு ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது படத்துக்கு இசை அமைக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்களாம்.

அதனால் தான் இந்தப் படத்துக்கு இளையராஜா சம்பளமே வாங்கவில்லையாம். இந்தப் படத்தில் கோடைகால காற்றே, ஆனந்தராகம், பூந்தளிர் ஆட, வெங்காய சாம்பாரும் ஆகிய இனிய பாடல்கள் உள்ளன.

௮௧ வயதாகும் இளையராஜா தற்போதும் கூட கொஞ்சமும் சோர்வில்லாமல் தனது இசைப்பணியைத் தொடர்கிறார் என்றால் ஆச்சரியம் தான். விடுதலை 2 படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதுதவிர தமிழகத்தின் பல ஊர்களில் மேடைக்கச்சேரியும் செய்து வருகிறார். வரும் ஜனவரி 17ம் தேதி நெல்லையில் அவரது மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் கச்சேரியை நடத்தி உள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top