Connect with us

latest news

2 நிமிட காட்சிக்கு 60 லட்சம் செலவு இழுத்த ஷங்கர்.. ரஜினி படத்தில் நடந்த சம்பவம்

சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இப்போது படங்களை தயாரிப்பதே நிறுத்திக் கொண்டது. எம்ஜிஆர் சிவாஜி போன்ற மாமேதைகளை வைத்து எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்து வந்த ஏவிஎம் ஒரு கட்டத்திற்கு பிறகு படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது என்றால் சினிமாவின் போக்கு இப்போது மாறியிருப்பதனால்தான்.

ஆரம்பகாலங்களில் எல்லாம் தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இயக்குனர்கள் கேட்பார்கள். ஆனால் இப்போது எங்கு படப்பிடிப்பை நடத்த வேண்டும்? என்ன மாதிரியான செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்வதே இயக்குனர்கள்தான். அப்படி இருக்கும் போது இதெல்லாம் சரி வராது என்ற காரணத்தினால்தான் ஏவிஎம் படத்தை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் ஏவிஎம் தயாரிப்புதான். அதில் ஒரு காட்சியில் ரஜினி விலையுயர்ந்த காரில் வந்து இறங்குவார். 2 நிமிட காட்சிதான். அந்த விலையுயர்ந்த காரை அந்த 2 நிமிட காட்சியில் பயன்படுத்துவதற்கு 60 லட்சம் செலவானதாம். உடனே ஏவிஎம் நிறுவனம் சங்கரிடம் ‘ நம்மகிட்டயே விலையுயர்ந்த கார் சில இருக்கின்றன‘ என சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் சங்கரோ இந்த பிராண்ட், இந்த மாடல்தான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டாராம். அதன் பிறகு 60 லட்சம் கொடுத்து அந்த காரை பயன்படுத்தியிருக்கிறார்கள் படத்தில். இப்படி தேவையில்லாத செலவு செய்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதை அறிந்துகொண்டே ஏவிஎம் படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது. சங்கரை பொறுத்தவரைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்தான்.

ஆனால் அது ஆரம்பத்தில் சரியாக இருந்தது. இப்போது அவர் பருப்பு வேகாது என்பதை போல் அவர் நிலைமை மாறிவிட்டது. கேம் சேஞ்சர் படத்தில் கூட பிரம்மாண்டமாக பெரிய பொருட்செலவு செய்து ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார். கடைசியில் அந்த பாடல் அந்த படத்திலேயே இல்லை என்பதுதான் உண்மை.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top