Categories: latest news throwback stories

அஜித் உங்க ஃபேன்னு சொன்னாரா? யோசிக்காமல் ஸ்ரீதேவி சொன்ன பதில பாருங்க

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு கூஸ்பம்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் குட் பேட்அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வருடம் அஜித்தின் அடுத்த அடுத்த இரு படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். ஒரு கட்டத்தில் அஜித்தை சேட்டு வீட்டு மாப்பிள்ளை ஆகிவிட்டார் என்று பலரும் விமர்சனம் செய்தனர். அது வலிமை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வந்தது தான் காரணம்.

ஏன் போனி கபூருடன் தொடர்ந்து அஜித் நடித்து வருகிறார் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு காரணம் ஸ்ரீதேவி என்றும் சொல்லப்பட்டது. ஏனெனில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் அஜித் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் போது ஸ்ரீதேவி அஜித்திடம் நாம் இருவரும் சேர்ந்து தமிழில் ஒரு படம் பண்ணலாம் என கூறியிருந்தாராம் .

ஆனால் அதற்குள் ஸ்ரீதேவி இறந்து விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே போனி கபூர் தயாரிப்பிலாவது படத்தில் நடிக்கலாம் என அஜித் நடித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் கூறிய வீடியோ வைரலாகி வருகின்றது. அதாவது இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை பற்றி பேசும்பொழுது இந்த படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

மிகவும் மென்மையானவர் .நல்லவர் .அவருக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். கேட்டதும் சரி என ஒத்துக் கொண்டார். அதற்காக பாம்பே வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என ஸ்ரீதேவி கூறினார். உடனே இதைக் குறிக்கிட்டு பேசிய நடிகை சுகாசினி ‘ஸ்ரீதேவி என்ற ஒரு பெயர் போதாதா? அதுவும் உங்களை பார்த்து நான் உங்களுடைய பெரிய ஃபேன் என்று சொல்லி இருப்பாரே அஜித்’ என கேட்க அதற்கு ஸ்ரீதேவி அப்படி எல்லாம் இல்லை என சிரித்துக் கொண்டே சொன்னார் ஸ்ரீதேவி.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்