Categories: latest news throwback stories

கமலும், ஸ்ரீதேவியும் தான் அந்த விஷயத்தில் மாஸ்… வேற யாரும் இங்கே இல்லையே?

80 காலகட்ட நடிகைகளுக்கு ஜோடியாகி சாதனை படைத்தவர் மலையாள நடிகர் பிரேம்நசீர். அதே போல தமிழ் சினிமாவில் அதிக நடிகைகளோடு நடித்து சாதனை பண்ணின தமிழ் நடிகர் யாரு? அதே போல அதிக தமிழ் நடிகர்களோடு நடிச்சி சாதனை பண்ணின தமிழ் நடிகை யாருன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

பிரேம்நசீர் – ஷீலா: ஒரே நடிகரோடு பல படங்களில் இணைந்து நடித்தக் கதாநாயகிகள் பல பேரு இங்கே இருக்காங்க. ஆனால் பிரேம்நசீர், ஷீலா ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சாதனையை யாராலும் முறியடிக்கப்படாது என்பதுதான் உண்மை. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து 140 படங்கள்ல ஜோடியா நடிச்சிருக்காங்க. அந்த சாதனையை யாரால் முறியடிக்க முடியும்?

பிரேம் நசீர் அளவுக்கு இல்லை என்றாலும் அவருக்கு இணையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடிச்ச பெருமை கமலுக்கே சொந்தமானது. அதுமாதிரி கதாநாயகியைக் குறிப்பிடணும்னா ஸ்ரீதேவியைக் குறிப்பிடலாம்.

கமல் – ஸ்ரீதேவி: கமலும், ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். மூன்றாம்பிறை, வாழ்வே மாயம், மீண்டும் கோகிலா, சங்கர்லால், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, தாயில்லாமல் நானில்லை, மூன்று முடிச்சு, மனிதரில் இத்தனை நிறங்களா ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களில் இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இருவரும் சிறந்த ஜோடி என தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். இவர்கள் இணைந்து எந்தப் படத்தில் நடித்தாலும் அது வெற்றிதான் என்ற அளவில் அப்போதைய காலகட்டத்தில் படங்கள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

27 படங்கள்: இவர்கள் இருவரும் இணைந்து 27 படங்கள் வரை நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள்தான் இவை. மேற்கண்டவற்றில் குறிப்பாக மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்றாம்பிறை: இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் என இரு விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகராக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. 1983ல் வெளியான இந்தப் படத்தின் ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் பாலுமகேந்திரா. படத்தில் அவருக்கும தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v