latest news
நாயகன் படத்தில் கமல் செய்துள்ள புதுமை… யாராவது இதைக் கவனிச்சீங்களா?
Published on
நாயகன் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்தார். படத்தில் கமலின் கெட்டப், நடிப்பு என எல்லாமே மிரட்டலாக இருந்தது. வேலுநாயக்கராகவே வாழ்ந்த கமல், அவரது மகன் மற்றும் மகளின் நடிப்பு, ஜனகராஜின் காமெடி மற்றும் இளையராஜாவின் இசை என எல்லாமே அருமை. பம்பாய் தாதாவா வேலுநாயக்கர். இப்படி அசர வைக்கிறாரே.
வெற்றிலைப்பாக்கை வாயில் போட்டுக் குதப்பியபடி, அவர் பேசும் ஸ்டைல் அழகோ. அழகு. நாலு பேருக்கு நல்லதுன்னா நாம செய்றதுல எதுவுமே தப்பில்லன்னு சொல்வதாகட்டும், அவனை நிறுத்தச் சொல்லு நிறுத்துறேன்னு கிளைமேக்ஸில் பேசும் அந்த நீண்டவசனமாக இருந்தாலும் சரி. கமல் நடிப்பில் அசகாய சூரர்னு நிரூபித்து இருந்தார். சாதாரண சீன்ல கூட ஸ்கோர் வாங்கினார்.
நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் சரண்யாவும் நடிப்பில் மெருகேற்றி இருந்தார். நைட் பத்து மணிக்குள்ள விட்டுருவீங்களான்னு அப்பாவியாய் கேட்கும் முத்தின கத்திரிக்காய் அவரா? என்ன ஒரு யதார்த்தமான அழுத்தமான நடிப்பு என்று வியக்க வைக்கிறார்.
நாயகன் படத்தில் கமல் என்னென்ன புதுமை செய்துள்ளார்னு தெரியுமா? நாலு வகையான நடையை நடந்துள்ளார். இளவயதில் ஒரு நடை. கொஞ்சம் வயதானதும் காலை அகற்றியபடி நடை. அப்புறம் அதை விட வயதானதும் காலை அகற்றியபடி மெதுவான நடை. இன்னொரு வயதில் ரொம்ப பயங்கரமாக கையை எல்லாம் அகட்டியபடி வேகமா நடப்பாரு.
இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினால் பசங்க கூட துளசி மாடத்தைச் சுற்றி வரும்போது வேகமா ஓடுவாரு. வயதானதும் துளசி மாடத்தைச் சுற்றி வந்து பொண்ணை அடிக்கும்போதும், நொண்டியபடி ஓடுவாரு. இப்படி ஒரு எக்ஸலண்டை வேறு யாராலும் காட்ட முடியாது. அவர் ஒரு லெஜண்ட் என்பதாலேயே இவ்ளோ வெரைட்டியைக் காட்டி இருந்தார்.
இந்தப்படத்தை வைத்து இதே காம்போ மீண்டும் இணைந்துள்ளது என தக் லைஃபைப் போய் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான். பலரும் அந்தக் காம்போவை கேலி செய்து ட்ரோல் பண்ணி வருகின்றனர். காரணம் நாயகன் மாதிரி அழுத்தமான கதை இல்லாததுதானாம்.
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...
TVK Vijay: தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களை...
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...