தமிழ்சினிமா உலகில் மட்டுமல்ல. கமலை இந்திய சினிமா உலகின் ஜாம்பவான்னே சொல்லலாம். இந்திய சினிமா உலகில் இருந்து போட்டியா யாராவது தமிழ்ல இருந்து வாங்கன்னு சொன்னா கண்ணை மூடிக்கிட்டு நம்ம நாயகனை இறக்கி விட்டுறலாம். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடன இயக்குனர்னு இவரது திறமைகளை சொல்லிக்கிட்டே போகலாம்.
வித்தியாசமான கேரக்டர்கள்: தமிழ், மலையாளம், பெங்காலி, தெலுங்கு, இந்தி, கன்னடம்னு பல மொழிப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆனார். பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் கமல். விருதுகளை வாரிக்குவித்து தமிழ்சினிமாவை ஆட்டிப் படைத்தவர் இவர் என்றால் மிகையில்லை.
ஜென்டில்மேன்: 1993ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்டமான சூப்பர்ஹிட் படம். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அர்ஜூன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு முதலில் கமலிடம் தான் நடிக்கக் கேட்டார்களாம். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் விலகி விட்டாராம்.
முதல்வன்: 1999ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம். அர்ஜூன் நடித்த இந்தப் படத்துக்கு ஏஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுவரன் வில்லனாக அசத்தியுள்ளார். இந்தப் படமும் சில காரணங்களால் கமல் மிஸ் பண்ணியதுதான். அவரை மனதில் வைத்துத் தான் ஷங்கரே கதை எழுதினாராம். சூப்பர்ஹிட் வெற்றியைத் தந்த படம்.
எந்திரன்: 2010ல் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கிய படம். ஹாலிவுட்டுக்கு நிகரான படம். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பிஜிஎம் செம மாஸ். இந்தப் படத்தில் முதலில் கமலும், ப்ரீத்தி ஜிந்தாவும் நடிக்க இருந்ததாம். அப்புறம் ஏதோ சில காரணங்களால் கமல் மிஸ் பண்ணி விட்டாராம்.
இந்தியன்: அந்த வகையில் கமல் மிஸ் பண்ணியவை எல்லாமே ஷங்கர் இயக்கிய படங்கள்தான். ஆனாலும் அவருடன் இணைந்து இந்தியன் என பிரம்மாண்டமான ஹிட் படத்தைக் கொடுத்து விட்டார் கமல். அதே நேரம் முதல்வன் படத்தில் நடிக்க விஜய், ரஜினிகாந்த் ஆகியோரிடமும் அழைப்புகள் வந்தது என்று சொல்லப்படுகிறது. அவர்களும் சில காரணங்களால் தவற விட்டு விட்டார்களாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…