Connect with us

latest news

சிறுவயதிலேயே கமலுக்குக் கிடைத்த பாடம்… அதுதான் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமா?

தமிழுக்கு அடுத்தபடியாக கமல் அதிகமாக நடித்ததுன்னா அது மலையாள மொழி திரைப் படங்கள்தான். அவரைப் பொருத்தவரைக்கும் மலையாளிகள் எல்லாரும் அவரைத் தங்களது சொந்த ஆளாகத் தான் நினைக்கிறாங்க.

ஏறக்குறைய 40 திரைப்படங்களுக்கு மேலாக மலையாளத்தில் நடித்திருக்கிறார் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். அடுத்து சில ஆண்டுகளிலேயே ‘கண்ணும் கரலும்’ என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார். அதை சாதாரண படம் என்று சொல்லிவிட முடியாது. மலையாளத்திரையுலகின் மகா நடிகனான சத்யன் நடித்த படம்.

chanakyan, kannum karalum

chanakyan, kannum karalum

அன்றைய மறுமலர்ச்சி நாடக ஆசிரியரான கே.பி.முகமதுவின் திரைக்கதை வசனம், எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசை, வயலார் ராமவர்மனின் பாட்டுகள், எல்லாவற்றுக்கும் மேலாக மலையாள சினிமா ரசிகனின் ரசனையைப் பேணிய கே.எஸ்.சேதுமாதவனின் இயக்கம் இருந்தது.

இந்த வலுவான பின்னணிகளை எல்லாம் 9 வயது சிறுவனான கமல் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது அவரது சினிமா வாழ்க்கையை மறைமுகமாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் ஒரு மலையாளத் திரைப்பட விமர்சகர்.

சிறுவயதிலேயே கமலுக்கு அப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்து இருந்ததையும், அவர்களின் செயல்பாடுகளையும் அவரது மனது உள்வாங்கியுள்ளது. அதுவே பின்னாளில் அவரைத் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் சிற்பியாகவும் மாற்றியுள்ளது என்றே தெரிகிறது.

சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் மலையாளத்தில் மாட்டுவின் சட்டங்களே என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். கமலின் மலையாளப் படமான சாணக்கியன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை டி.கே.ராஜீவ்குமார் இயக்கியுள்ளார்.

கமல், ஊர்மிளா, ஜெயராம், மது, திலகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு விறுவிறுப்பான படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1989ல் வெளியானது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். கண்ணும் கரலும் என்ற இந்த மலையாள வெற்றிப்படம் 28.9.1962ல் வெளியானது. அந்தப்படத்தில் சிறுவனாக மிக அற்புதமாக நடித்துள்ளார் கமல்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top