கமலுக்குப் பல பிரமாதமான பாடல்களைப் பாடியவர் எஸ்பி.பாலசுப்பிரமணியம். 80ஸ் கிட்ஸ்களுக்கு இது ரொம்ப நல்லாவே தெரியும். இளையராஜா, கமல், எஸ்பிபி காம்போ என்றாலே படமும் பட்டையைக் கிளப்பும். பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இப்போதும் இந்த பேக்கேஜை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு கடைகளில் ரசிகர்களுக்குப் பாடல்களைப் பதிந்து கொடுக்கின்றனர்.
அந்த வகையில், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்காக கமல், எஸ்பிபி, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது கமல் பாடகர் எஸ்பிபி குறித்து பேசிய சில சுவாரசியமான தகவல்களில் சிலவற்றைப் பார்ப்போம். ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்துட்டு வரும்போது எல்லாரும் மூக்கை விடைச்சிக்கிட்டு அப்படியே வருவாங்க.
ஒரு ஃபீலிங் வரும்: ஷான் கானரியா ஆகிட்ட ஃபீலிங். புரூஸ்லி படம் பார்த்துட்டு வரும்போது எல்லாரும் கையைத் தூக்கிட்டு அப்படி பண்ணுவாங்க. பஸ், டாக்சி எல்லாம் வரும்போது ஊன்னு கத்துவாங்க. அந்த மாதிரி பாலு சார் பாட்டைக் கேட்கும்போது ஒரு ஃபீலிங் வரும். அவரு மாதிரி பாட்டைப் பாடி எனக்கு பல நட்புகள் எல்லாம் கிடைச்சிருக்கு.
படம் நல்லாருக்கா: எனக்கு ரொம்ப உதவியா அவரு இருந்தாரு. அவரு முதல்ல பாட ஆரம்பிச்சிட்டாரு. வாத்தியாருக்குப் பாடினாரு. பாலு சாருக்கிட்ட எல்லாம் படம் நல்லாருக்கான்னு கேட்குறது கிடையாது. சுமாரா இருந்தா கூட பிரமாதம்னு சொல்லிடுவாரு.
போன்ல தொந்தரவு: நான் சுமாரா அடிக்கடி பண்ணுவேன். அவர் அப்படி பண்ணினதே கிடையாது. எப்பவாவது போன்ல தொந்தரவு பண்ணுவேன். இரண்டு பேரும் ரொம்ப நேரமா போன்ல பேசுவோம். அப்புறம் ‘எங்கே இருக்கீங்க…’ன்னு கேட்பேன். ‘அமெரிக்காவுல இருக்கேன்’னு சொல்வாரு. ‘ஐயய்யோ… அப்புறம் பேசுறேன்’னு சொல்வேன்.
நோஸ் கட் : எஸ்பிபி கூட எல்லாம் பழகி பழகி நாம செய்றது எல்லாம் ரைட்டா இருக்கும்னு மூக்குல அடிபடுற வரைக்கும் தெரியாது. ஆந்திராவுல போய் நான் பேசினேன்னா ‘என்ன உடம்பு சரியில்லையான்னு கேட்பாங்க. இல்லையே’ன்னு சொல்வேன். ‘இல்ல குரல் ஒரு மாதிரியா இருக்கு’ன்னு சொல்வாங்க. அவங்களுக்கு இவரு குரல் தான் தெரியும் என்று சிரிக்கிறார் கமல்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…