Categories: latest news throwback stories

கமல் எடுத்த முயற்சி தோல்வி… இளையராஜா, ஏஆர்.ரகுமான் இனியாவது இணைவார்களா?

தமிழ்த்திரை உலகில் இசைஞானி என்றால் அது இளையராஜா. இசைப்புயல் என்றால் ஏஆர்.ரகுமான். அவரை ஆஸ்கார் நாயகன் என்றும் சொல்லலாம்.

சிம்பொனிக்கு வல்லவர் இளையராஜா. இன்றும் அவரது 80ஸ் ஹிட்ஸ்சைக் கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும். அதே போல ஏஆர்.ரகுமானின் பாடல்கள், மெலடீஸ், துள்ளல் என அனைத்துமே மாஸாக இருக்கும். ஏஆர்.ரகுமான் நகரத்துப் படங்களுக்குத் தான் இசை அமைப்பார் என்ற பிம்பத்தை கிழக்குச் சீமையிலே படம் உடைத்து எறிந்தது.

இந்தப்படத்திற்குப் பிறகு இசைப்புயல் ஆனார். படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். அந்த வகையில் இந்த இருபெரும் ஜாம்பவான்களும் ஏன் இன்னும் இணையவில்லை என்ற கேள்வி எழலாம். அந்தக் காலத்தில் இளையராஜா, எம்எஸ்வி ஆகியோரெல்லாம் இணையவில்லையா? மெல்லத்திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, விஸ்வா துளசி, செந்தமிழ் செல்வன் ஆகிய படங்களைப் பாருங்கள். இருவரும் இசையில் கலக்கி இருப்பார்கள்.

மெல்லத்திறந்தது கதவு படத்தில் குழலூதும் கண்ணனுக்கு பாடல் ஒன்றே போதும். பாடல் அவ்ளோ சூப்பராக இருக்கும். அந்தக் கால வானொலி நிலையங்களில் இந்தப் பாடல் ஒலிக்காத நாள்களே இல்லை எனலாம். அதே போல செந்தமிழ்பாட்டு படத்திலும் வண்ண வண்ண என்ற பாடல் அருமையாக இருக்கும். இவர்களுக்கு மட்டும் என்னன்னு கேட்வங்களுக்குத் தான் இந்தப் பதிவு.

எம்எஸ்வி., இளையராஜா சேர்ந்து பணியாற்றிய மாதிரி இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் சேர்ந்து பணியாற்றுவார்களா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏன் உருவாகாதுன்னு நினைக்கிறீங்க? தாராளமாக உருவாகும். இளையராஜாவும், ஏஆர்.ரகுமானும் இணைந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு கமல்ஹாசனால உருவாக்கப்பட்டது. கடைசி நேரத்துல ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அது நடக்கல. மீண்டும் அப்படிப்பட்ட முயற்சிகளை யாராவது மேற்கொள்ள மாட்டார்களா என்னன்னு பதிலுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் சித்ரா லட்சுமணன்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v