Categories: latest news throwback stories

கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய சூப்பர்ஹிட் பாடல்… என்ன படம்னு தெரியுமா?

தமிழ்சினிமா உலகில் துவண்டு போற உள்ளத்தையும் தூக்கி விடும் வகையில் பாடல்களை நச்சென்று எழுதக்கூடியவர்தான் கவிஞர் கண்ணதாசன். ரயிலை பிடிக்கப் போற அவசரத்துல 10 நிமிஷத்துல பாட்டு எழுதியுள்ளார் கண்ணதாசன். வாங்க பார்க்கலாம்.கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய சூப்பர்ஹிட் பாடல… என்ன படம்னு தெரியுமா?

இவரது பாடல் வரிகள் என்றும் அழியாத ரகசியம் கொண்டவை. நடிப்பின் மேல் உள்ள காதலால் தனது 16வது வயதில் சென்னைக்கு ஓடி வந்தார் கண்ணதாசன். தனது முதல் வாய்ப்பாக கிடைத்தது எழுதக்கூடிய வாய்ப்புதான். இவர் முதன் முதலில் கன்னியின் காதலி என்கிற படத்தில் கலங்காதிரு மனமே என்கிற பாடலைத் தான் எழுதி இருந்தார். இவர் சுமார் 4500 படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

6 படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவர் பல படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். 7 பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இவர் 54 வயதிற்குள் அனைத்தையும் செய்து முடித்தார். உலகிலேயே தனக்குத் தானே இரங்கற்பா எழுதியவர் கண்ணதாசன்தான். அவர் இறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே எழுதினாராம்.

அவர் கடைசியாக எழுதிய பாடல் மூன்றாம்பிறை படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’ பாடல் தான். கண்ணதாசன்கிட்ட ஒரு பாடலின் காட்சியை விவரித்து விட்டால் 30 நிமிடத்தில் எழுதி முடித்து விடுவாராம். கண்ணதாசனுக்கு 5000 ரூபாய் பணத்தேவை இருந்துருக்கு. அவர் அவசரம் அவசரமாக ஊருக்குப் போய்க்கிட்டு இருந்தாராம். ரெயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது இயக்குனர் ஸ்ரீதர் அவரை ஒரு பாடலை எழுதிக்கொடுக்கணும்னு அழைத்தாராம். அதற்கு கண்ணதாசன் பணத்தேவைக்காக அவசரமாக ஊருக்குப் போறேன்னு சொன்னாராம். அதற்கு ஸ்ரீதர் நீங்க கையோடு பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிட்டுப் போங்கன்னு சொன்னாராம்.

பாட்டும் எழுதணும். பணமும் வேணும். ஊருக்கும் போகணும் என்கிற சூழலில் 10 நிமிடத்தில் ஒரு பாடலை எழுதினாராம் கண்ணதாசன். அது ஸ்ரீதருக்கும் பிடித்து விட கண்ணதாசன் பணத்தை வாங்கி விட்டுச் சென்றாராம். அது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரக்கூடிய ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பிரபலமான பாடல். இதுதான் கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v