latest news
கரகாட்டக்காரன் செய்த மாபெரும் சாதனை… இன்று வரை எந்தப்படமும் செய்யலையே!
Published on
1989ல் இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் இயக்கிய படம் கரகாட்டக்காரன். கருமாரி கந்தசாமி, ஜெ.துரை ஆகியோரின் தயாரிப்பில் வெளியானது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது.
இளையராஜாவின் இசை: இந்தப் படத்தில்தான் கனகா அறிமுகம் ஆனார். படத்தின் பிளஸ் பாயிண்ட் பாடல்கள், திரைக்கதை, காமெடி, சென்டிமென்ட். குறிப்பாக இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். இந்த மான், குடகு மலைக் காற்றில், மாங்குயிலே, மாரியம்மா, மாரியம்மா, முந்தி முந்தி, நந்தவனத்தில் ஒரு, பாட்டாலே புத்தி, ஊரு விட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.
கனகாவுக்குப் பதில் பானுப்பிரியா: கவுண்டமணி, செந்திலின் வாழைப்பழ காமெடி இந்தப் படத்தில் தான் வரும். 1989ல் தமிழக அரசின் சிறப்பு விருது கிடைத்தது. இந்தப் படத்தில் முதலில் கனகாவுக்குப் பதில் பானுப்பிரியா தான் நடிப்பதாக இருந்ததாம். அப்போ என்ன காரணத்தாலோ கங்கை அமரன் அவரை நடிக்க வைக்கவில்லையாம்.
பாக்கியராஜ் சொல்லியும் நான் கேட்கல. எனக்கு அப்போ மனசு வரலன்னு சொல்கிறார் கங்கை அமரன். கனகாவை நடிக்க வைத்தார்களாம். இவர் பிரபல நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 கோடி வசூல்: அப்போதே ஏறக்குறைய வெறும் 35 லட்சத்தில் தயாரித்து திரையரங்குகளில் ஏறக்குறைய 485 நாள்கள் ஓடிய நிலையில் சுமார் 5 கோடிக்கு மேல் வசூல் செய்ததாம். குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை ஈட்டிய படம் அன்று முதல் இன்று வரை இதுவாகத்தான் இருக்கும். மாபெரும் சாதனை படைத்து இருக்கும் அந்தப் படம்தான் கரகாட்டக்காரன்.
மைல் கல்: தமிழ்சினிமா உலகில் ராமராஜனை மக்கள் நாயகன்னு சொல்வாங்க. அந்த வகையில் ராமராஜன் நடித்தவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் தான். அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை போவதே தெரியாது. காட்சிக்குக் காட்சி ரசனையைத் தூண்டி இருப்பார் கங்கை அமரன்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை...
TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர்...
Vijay TVK Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று கரூருக்கு பரப்புரைக்காக சென்ற போது அங்கு கூட்டத்தில்...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று அங்கு...