latest news
சிவாஜி, எம்ஜிஆருக்குக் கிடைத்து நழுவிய வாய்ப்பு… ஜெமினிக்கு அடித்த லக்..! அந்தப் படமா?
Published on
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திvரைப்பயணத்தில் கற்பகம் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கதை வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும் இருந்த கோபாலகிருஷ்ணனை ஒரு ஸ்டூடியோ அதிபராக ஆக்கியதுன்னா அது கற்பகம் திரைப்படம்தான். தூண்டாமணி விளக்கு என்ற பெயரில் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கதை தான் பின்னாளில் கற்பகம் ஆனது.
சிவாஜி நடிக்க தூண்டாமணி விளக்குக் கதையை முதலில் படமாக்க ஆசைப்பட்டவர் பாடலாசிரியர் மருதகாசி. ஓரிரு நாள்கள் படப்பிடிப்பு நடத்தினார். அதன்பிறகு சில பொருளாதார சிக்கல்களால் அவரால் படத்தைத் தொடர முடியவில்லை. அதன்பிறகு எம்ஜிஆரிடம் இந்தக் கதை வந்தது. கேட்டதும் அவருக்குப் பிடித்துப் போனது. அதன்பிறகு எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாள்கள் நடந்தது.
அதுவும் நின்று போனது. சிவாஜி, எம்ஜிஆரைத் தொடர்ந்து அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் தான் ஜெமினிகணேசன். அப்போது அந்தப் படத்தின் பெயர் கற்பகம் ஆனது. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க புதுமுகத்தைத் தேடினார் டைரக்டர். பலரையும் தேர்வு செய்தார். ஆனால் ஒருவரும் சரியாக அமையவில்லை.
அப்போது வந்தவர்தான் கேஆர்.விஜயா. அந்தப் படம் அவருக்கு எப்பேர்ப்பட்ட பெயரைப் பெற்றுத் தந்ததுன்னு தெரியுமா? அதன்பிறகு 400க்கும் மேற்பட்ட படங்கள் நடிக்க இந்த கற்பகமே காரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
1963ல் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் கற்பகம். ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, சாவித்திரி, முத்துராமன், ரங்கராவ், எம்.ஆர்.ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். மன்னவனே, அத்தை மடி, ஆயிரம் இரவுகள், பக்கத்து வீட்டு ஆகிய தேன் சிந்தும் பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.
1963ல் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் கற்பகம். ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, சாவித்திரி, முத்துராமன், ரங்கராவ், எம்.ஆர்.ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். மன்னவனே, அத்தை மடி, ஆயிரம் இரவுகள், பக்கத்து வீட்டு ஆகிய தேன் சிந்தும் பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...