Connect with us

latest news

தேவர் சொல்லி மறுப்பே சொல்லாத எம்ஜிஆர்… காரணம் அதுதானாம்!

இன்னைக்கு சினிமாவுல நன்றி மறத்தல் வந்து ரொம்ப சர்வசாதாரண விஷயம். சாப்பிட்ட அந்த ஈரக்கை காயறதுக்குள்ள நன்றியை மறந்துடுவாங்கன்னு சொல்வாங்க. ஆனா நன்றி மறக்காமல் இருந்ததுக்கான சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஒருமுறை ஜெமினி ஸ்டூடியோவுல ஜூனியர் ஆர்டிஸ்டுக்கான செலக்ஷன் நடக்குது. அப்போ எம்ஜிஆர் ராமச்சந்திரனா இருந்த நேரம். அவரு அங்கே வாராரு. ‘நீ என்னய்யா கட்டையா இருக்கே. வெள்ளையா இருந்தா மட்டும் போதுமா?’ன்னு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. அப்போ எம்ஜிஆர் மனம் உடைஞ்சிப் போயிடுறாரு.

அப்போ அங்க பெருத்த உடலோடு பயில்வான் மாதிரி அங்கே வந்து ஒருத்தர் நிக்கிறாரு. ‘தம்பி பார்க்குறதுக்கு பிரமாதமா இருக்குறீங்க. எதிர்காலத்துல நீங்க பெரிய நடிகரா ஆகிடுவீங்க…’ அவரு மனசுக்கு உள்ளே இருந்து சொன்னாரா? உதட்டுல இருந்து சொன்னாரான்னு தெரியல. பொதுவாகவே அவரு கணிச்சிருக்காரு.

அந்த வார்த்தை வந்து எம்ஜிஆருக்குப் பெரிய உற்சாகமா இருந்தது. அந்த உற்சாகத்தோடு வெளிப்பாடு தான் பிற்காலத்தில எம்ஜிஆர் பெரிய ஹீரோவா ஆகுறாரு. சொன்னவரு பெரிய தயாரிப்பாளரா ஆகுறாரு.

அவருதான் சான்டோ சின்னப்பா தேவர். அவரோட தேவர் பிலிம்ஸ்ல தான் எம்ஜிஆர் நிறைய படங்கள் கொடுத்தாரு. தேவர் சொல்லி எம்ஜிஆரு மறுப்பே சொல்ல மாட்டாரு. காரணம் என்னன்னா அன்னைக்கு தேவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை. அந்த நன்றிக்கடன் தான். அது என்னைக்குமே மறக்காதவர் எம்ஜிஆர்.

சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் 1956ம் ஆண்டு முதல் 1972 வரை 16 படங்களில் நடித்துள்ளார் எம்ஜிஆர். தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த முதல் படம் தாய்க்குப் பின் தாரம். சூப்பர்ஹிட் ஆனது. தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத்தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகியவை தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top