எம்ஜிஆரும் வாலியும் நல்ல நண்பர்கள். ஒருசமயம் எம்ஜிஆர் வாலியைக் கிண்டல் பண்ணுவதற்காக ஒரு வார்த்தையை சொன்னார். அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படம் தயாராகிக் கொண்டு இருந்தது. அப்போது எம்ஜிஆர் வாலியிடம், இந்தப் படத்துல எல்லாப் பாடலும் கண்ணதாசன்தான். நீங்க கிடையாதுன்னு சொன்னாராம்.
ஆச்சரியமான எம்ஜிஆர்: அதற்கு வாலி, கண்ணதானை நீங்க வச்சுக்கோங்க. எனக்கு ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. ஆனால் நான் இல்லாம என் பேரு இல்லாம உங்களால உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுக்க முடியாதுன்னு சொன்னாராம்.
வாலியின் வேடிக்கை: உடனே ஆச்சரியமாக பார்த்த எம்ஜிஆர், அதெப்படி உங்க பேரு இல்லாம இந்தப் படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்றீங்கன்னு கேட்டுள்ளார். அதற்கு வாலி வேடிக்கையாக இப்படி சொன்னாராம். என் பேரை நீக்கிட்டு போட்டீங்கன்னா, உலகம் சுற்றும் பன்னுதான் போட முடியும். அப்படின்னு சொன்னாராம்.
என்னதான் எம்ஜிஆர் ஒரு உச்சநட்சத்திரமாக இருந்தாலும் கவிஞர் பேசும் பேச்சில யாராக இருந்தாலும் அதில் ரசனை இருக்கும்போது கோபப்படமாட்டார் என்றே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
உலகம் சுற்றும் வாலிபன்: எம்ஜிஆரின் திரை உலக வாழ்க்கையில் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஒரு மைல் கல். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நடித்தவர் எம்ஜிஆர். இந்தப் படத்துக்காக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் என்று வெளிநாடுகளுக்குப் போய் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சூப்பர்ஹிட் பாடல்கள்: 1973ல் எம்ஜிஆர், மஞ்சுளா, லதா, சந்திரலேகா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். அவள் ஒரு நவரச, பன்சாயி, லில்லி மலருக்கு, நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும் உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…