எம்ஜிஆர் படத்தில் பிரச்சினை: பிரச்சனை எங்கு தான் இல்லை. பிரச்சனை இல்லாத இடம் சுவாரசியமற்றது. அப்படி பிரச்சனை வரும் பொழுது தான் நாம் இழந்த அறிவை பெற முடியும். எப்படி இந்த பிரச்சனையை சரி செய்யலாம். எந்த மாதிரி சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கும். அப்படி சினிமாவிலும் பல பிரச்சனைகளை பலர் எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்தப் பிரச்சினையை இது ஒரு பிரச்சனையே இல்லை என்று நினைத்து அதை கடப்பவர்கள் தான் இந்த சினிமாவில் சாதிக்க முடியும். அப்படி ஒரு சம்பவம் தான் எம் ஜி ஆர் படத்தில் நடந்திருக்கிறது.
எல்லாம் அறிந்த புரட்சித்தலைவர்: எம்ஜிஆரை பொறுத்த வரைக்கும் அவர் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் இயக்குனரும் கூட. ஒரு படத்திற்கு என்னென்ன தேவை எது முக்கியம் என்பதை நன்கு அறிந்தவர். ஒளிப்பதிவிலும் எம்ஜிஆருக்கு நல்ல ஒரு அறிவு உண்டு. எந்த கோணத்தில் கேமராவை வைக்க வேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்தவர். அதுபோல எம்ஜிஆரை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் நீலகண்டன். சொல்லப் போனால் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் என்று சொல்லலாம். சிவாஜிக்கு எப்படி பீம்சிங் பல படங்களை இயக்கினாரோ அதேபோல எம்ஜிஆரை வைத்து பல படங்களை இயக்கியவர் நீலகண்டன்.
கோபப்பட்ட நீலகண்டன்: கிட்டத்தட்ட எம்ஜிஆரை வைத்து 18 படங்களை இயக்கியிருக்கிறார் நீலகண்டன். அப்படி எம்ஜிஆரை வைத்து இயக்கிய ஒரு படத்தில் காட்சி கோணங்களை எல்லாம் வைத்து காமிராவையும் சரியான இடத்தில் வைத்துவிட்டு எம்ஜிஆருக்காக காத்திருந்தாராம் நீலகண்டன். அப்போது எம்ஜிஆர் வந்து அவர் சொன்ன இடத்திற்கு எதிராக கேமராவை வைக்க சொல்லிவிட்டு எல்லாம் ரெடி ஆனதும் என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம் எம்ஜிஆர். இது நீலகண்டனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என்ன நெனச்சிகிட்டு இருக்காரு அவரு .நான் எல்லாத்தையும் செட்டப் செய்து வைத்திருக்கிறேன். இவரு மொத்தமா மாத்த சொல்லிட்டு போறாரே. இனிமேல் இந்த படத்துல நான் இருக்க மாட்டேன். டைரக்ட் செய்ய மாட்டேன். நான் கிளம்புறேன் என வேகமாக வெளியே சென்று விட்டாராம் நீலகண்டன். ஆனால் நல்ல வேளையாக நீலகண்டனின் கார் டிரைவர் அங்கு இல்லை. அதனால் டிரைவருக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தாராம் நீலகண்டன். உடனே உதவியாளர் ஓடி வந்து எம்ஜிஆருக்கு இருக்கும் செல்வாக்கு உங்களுக்கு தெரியும் அல்லவா.
அவரை பகைத்துக் கொண்டு இருக்க முடியுமா. அதுமட்டுமில்லை எம்ஜிஆர் ஒன்னும் விவரம் தெரியாத ஆள் இல்லை. கேமரா கோணங்கள் பற்றி எல்லாம் முழுசாக தெரிந்தவர். அவர் மாற்றி வைக்க சொன்னார் என்றால் மாற்றி வைத்துவிட்டு போங்களேன். அதுல உங்களுக்கு என்ன நஷ்டம். உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும். இதையெல்லாம் அனுசரித்து போனால் நமக்கு நல்லது. இல்லையென்றால் நீங்கள் தான் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள் என சொல்லி அவரை சமாதானப்படுத்தி படப்பிடிப்பிற்குள் அழைத்துச் சென்று இருக்கிறார் அந்த உதவியாளர். அதனால்தான் எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை நீலகண்டனால் இயக்க முடிந்தது. இந்த ஒரு தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…