சிவாஜியை தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் என்று சொல்வார்கள். எந்த நடிகர் என்றாலும் அவரது சாயல் இல்லாமல் இருக்காது. சிவாஜியைத் தமிழ்சினிமா உலகின் சிம்ம சொப்பனம் என்றும் கலைத்தாயின் தவப்புதல்வன் என்றும் சொல்வார்கள்.
அந்த வகையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிக்கக்கூடியவர்தான் சிவாஜி. அவருடைய நடிப்பு தான் ஒரு இலக்கணமாக இன்று வரை இருக்கிறது. போலீஸ், ஜட்ஜ், குடும்பத்தலைவர், விறகு வெட்டி, சித்தர், திருடன், கோமாளி, நாடகக்கலைஞன் என எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அது உள்ளது உள்ளபடியே இருக்கும். சிவாஜியின் நடிப்பு குறித்து புகழாத கலைஞர்களும் இல்லை. ரசிகர்களும் இல்லை.
நடிப்பு என்று வந்துவிட்டால் அது அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தன்னைப் போலவே தன்னுடன் நடிக்கும் கலைஞர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதே போல சக நடிகர், நடிகைகளுக்கும் நடிக்க கஷ்டமாக இருந்தால் அதை எளிய முறையில் சொல்லிக் கொடுப்பாராம்.
நடிகர் திலகம் உடன் நடிப்பதற்கே பல நடிகர்களும் தயங்குவார்கள். அவர் எவ்ளோ பெரிய நடிகர் என்று தான் அந்த தயக்கமே ஆரம்பிக்கும். ஆனால் சகஜமாகப் பேசி அந்தத் தயக்கத்தைப் போக்கி விடுவாராம் சிவாஜி. இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்ற வகையில் சினிமாவில் நடித்து விட்டார்.
sivaji, nambiyar
இவரது நடிப்பு பற்றி பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான மறைந்த எம்.என்.நம்பியார் ஒருமுறை இப்படி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த நடிகர்களுக்கு எல்லாம் தலைசிறந்தவர்தான் சிவாஜி. எந்த வேடமாக இருந்தாலும் சரி. மற்றவர்களை விட திறமையாக நடித்துக் கொடுப்பதில் வல்லவர்.
உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தினார். அதுல வில்லன் சிவாஜிக்கு துணைநின்று ஆலோசனை சொல்லும் கதாபாத்திரம் தான் எனக்கு. அந்தப் படத்துக்குப் பிறகு சிவாஜி வில்லனாக நடித்திருந்தால் எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும். அவ்வளவு பர்பக்ட்டாக நடிக்கக்கூடியவர் சிவாஜி என்கிறார் நம்பியார்.
சிவாஜி வரலாற்றில் மறக்கமுடியாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதாபாத்திரங்களிலும், ஆன்மிகத்தை எடுத்துக்கொண்டால் சிவபெருமானாகவும் நடித்து அசத்தியவர். இது வெறும் நடிப்பாக மட்டுமே இருக்காது. அப்படித்தான் சிவபெருமான், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் எல்லாம் இருப்பார்களோ என்று நம்மையே நம்ப வைத்துவிடுவார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…