Connect with us

latest news

Flash back: கிளைமேக்ஸை மாத்துங்க… தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்க மறுத்த ரஜினி

ஏவிஎம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு சூப்பர்ஹிட் படம் நல்லவனுக்கு நல்லவன். இந்தப் படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு மசாலா படம். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ்ல ஒரு அற்புதமான பைட் இருக்கும். முதல்ல இதன் கிளைமேக்ஸ் மென்மையாக இருந்தது. ஆனாலும் அது பொருந்தாது என்று ஏவிஎம் சரவணனுக்குத் தெரிந்தது.

இந்தப் படத்தைப் பொருத்தவரை நாம சண்டைக்காட்சிகள் நிறைந்த மசாலா படமாக உருவாக்கி இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்னு ஏவிஎம். சரவணன் சொன்னார். அதைக் கேட்டதும் ரஜினியும், எஸ்பி.முத்துராமனும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இதை இப்படியே விட்டுருங்கன்னு ரஜினியும், எஸ்பி.முத்துராமனும் ஏவிஎம்.சரவணனிடம் சொன்னார்கள். அதற்கு எனக்கு என்னமோ இந்த கிளைமேக்ஸோடு படம் வெளியானா நிச்சயம் பெரிய வெற்றியை அடையாதுன்னு எனக்குத் தெரியாது. அதனால ஒண்ணு செய்வோம்.

நான் சொன்ன மாதிரி சண்டைக்காட்சியோடு கிளைமேக்ஸை எடுத்து முடிங்க. இந்த இரண்டு கிளைமேக்ஸையும் தெரிஞ்சவங்களுக்குப் போட்டுக் காட்டுவோம். எல்லாரும் என்ன சொல்றாங்களோ அதை வைத்து முடிவு எடுக்கலாம் என்றார்.

அவர் அப்படி சொன்னதும் வேறு வழியில்லாமல் அந்தக் கிளைமேக்ஸையும் எடுத்தார்கள். வந்து இருந்தவர்களிடம் போட்டுக் காட்டியபோது எல்லாரும் ஒட்டுமொத்தமாக ஆக்ஷன் கிளைமேக்ஸ் தான் நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதனால அதையே வைத்துப் படம் வெளியிட வசூலில் மாஸ் காட்டியது நல்லவனுக்கு நல்லவன்.

ஏவிஎம் தயாரிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் நல்லவனுக்கு நல்லவன் .இளையராஜா இசை அமைத்துள்ளார். வச்சிக்கவா, உன்னைத்தானே, முதலாடாதே, நம்ம முதலாளி, சிட்டுக்குச் செல்ல ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

படம் முழுக்க விறுவிறுப்பாகவும் அடுத்து நடப்பது என்ன என்பதை யூகிக்க முடியாததாகவும் அறிவித்துள்ளது. ரஜினிக்கு இந்தப் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்.

இந்தப் படத்தில் கார்த்திக், ராதா ஆகியோரின் நடிப்பும் மாஸாக இருந்தன. அந்தக் காலத்தில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் 100 நாட்கள் வரை ஓடி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் வரும் சிட்டுக்குச் செல்ல சிட்டுக்குப் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றது. அதே போலவே வச்சிக்கவா பாடலும் மாஸானது. தொடர்ந்து அந்தப் பாடலை சிம்புவுக்கும் ரீமேக்காகக் கொடுத்தார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top