Connect with us

latest news

சினிமாவே வேணாம்னு ஓடிய பாலாசிங்!.. அவரை இழுத்து வந்த நடிகர்!.. எல்லாமே ஹிட்டுதான்!..

தமிழ்சினிமாவில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் பாலாசிங். இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரர். கமல், மணிரத்னம், ஷங்கர் ஆகிய பெரிய இயக்குனர்கள் இயக்கிய படங்களில் நடித்துள்ளார். வில்லனாக நடித்தாலும் நடிப்பில் மாஸ் காட்டினார்.

இந்தியன்: இவர் முதலில் நடித்தது மலமுகலியெ தெய்வம் என்ற மலையாளப் படம். இது 1983ல் வெளியானது. அவதாரம், இந்தியன், உல்லாசம், மறுமலர்ச்சி, சுதந்திரம், திருப்பதி, புதுப்பேட்டை, நான் அவனில்லை, முனி, குரங்கு பொம்மை, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார் பாலாசிங்.

2019ல் மறைந்த ஒரு சிறந்த கலைஞர். யூகிசேது இயக்கத்தில் உருவான கவிதை பாட நேரமில்லை படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.

நாகர்கோவில்: இந்த 2 அனுபவங்களுமே அவருக்குத் திருப்தியைத் தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன்காரணமாக சினிமாவே வேண்டாம் என்று தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது உறவுக்காரப் பெண்ணை மணந்துகொண்டு அந்த ஊரிலேயே இருந்தவரை மீண்டும் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு வந்தவர் அவரது நண்பர் நாசர்.

அவதாரம் படம்: அவதாரம் கதையில் மாசி கதாபாத்திரத்தை எழுதி முடித்ததும் என் மனதில் ‘பளிச்’சென நினைவுக்கு வந்தவர் பாலாசிங் தான். உடனே காரை எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்றாராம். 10 மணி நேரம் பயணம். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் அவதாரம் படத்திலே அவரை நான் நடிக்க வைத்தேன்.

நிலை உயரவில்லை: அதற்குப் பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பாலாசிங்கிற்கு அமைந்தது. என்றாலும் பொருளாதார ரீதியில் அவரது நிலை உயரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இறப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்னால தன் மகளின் திருமணத்தை மிகச்சிறப்பாக நடத்தினார் பாலாசிங். அந்தத் திருமணத்தில் நான் கலந்து கொண்டதில் அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என நாசர் சொல்லியிருக்கிறார்.

விருமாண்டி: பாலாசிங் நடித்த கடைசி படம் நீர்த்திரை. கமலின் விருமாண்டி படத்திலும் பாலாசிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் அவை வில்லன் வேடங்கள்தான்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top