Connect with us

latest news

80களில் தெறிக்க விட்ட க்ரைம் திரில்லர்…! ஊமை விழிகள் படத்துல இதை யாராவது கவனிச்சீங்களா?

1986ல் ஊமைவிழிகள் படத்தை ஆபாவாணன் தயாரித்துள்ளார். அரவிந்தராஜ் இயக்கியுள்ளார். பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களை வைத்து எடுத்த படம். ராஜராஜசோழன்தான் சினிமாஸ்கோப்பில் வந்த முதல் தமிழ்ப்படம். சிவாஜி நடித்து இருந்தார். அதன்பிறகு வந்த படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். ரஜினி, கமல் நடித்தனர். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த படம்தான் ஊமை விழிகள்.

இந்தப் படத்தில் முதல் 48 நிமிடங்களுக்குப் பிறகுதான் ஹீரோவான விஜயகாந்தே வருவார். வழக்கமான கதையாக இது இருக்காது. இந்தப் படத்தில் பில்டப் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. சோழா பிக்னிக் வில்லேஜ் தான் இப்ப உள்ள விஜிபி ரெஸ்டாரண்ட்.

அங்கு என்ன தான் நடந்ததுன்னு ஆடியன்ஸ் கேட்கணும்கறதுக்காக அந்த பில்டப்பை ஒவ்வொரு டயலாக்கிலும் வைத்து இருந்தார் இயக்குனர். விஜயகாந்த், அருண்பாண்டியன், தியாகு, கார்த்திக், சரிதா, சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, கோகிலா, இளவரசி, மலேசியாவாசுதேவன், செந்தில், விசு, கிஷ்மு, சங்கீதா, தேங்காய்சீனிவாசன், சச்சு, குமரிமுத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன், லூஸ்மோகன், டைமன்ட் பாபு, சசிகலா, மீசை முருகன், டிஸ்கோ சாந்தி, ஆனந்தன், எஸ்.ஆர்.ஜானகி என பலரும் நடித்துள்ளனர். இதுல எஸ்.ஆர்.ஜானகிதான் கிழவியா வந்து மிரட்டுவாங்க.

அனவார் ஃபிக்லென்ஸ் என்ற லென்ஸ் கொண்ட வித்தியாசமான கேமராவால் முதன்முதலாக இந்தப் படத்தை எடுத்தனர். படத்தின் மியூசிக் மனோஜ் கியான். கேப்டன் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடிய படம். கிளைமாக்ஸ்ல வர்ற கேமராவுக்காக கிளாப் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. படத்துல பிரிட்ஜைத் திறந்தா ஒரு பொண்ணு நடுங்கிக்கிட்டு இருக்கும். இப்படி ஒரு ஷாட்டை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. மேக்கிங்ல இப்படி எல்லாம் பண்ணலாமான்னு ஆச்சரியப்படுற அளவு எடுத்திருப்பாங்க. பாடல்கள் எல்லாமே சிறப்பு.

அதிலும் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடலும் அவ்ளோ அருமையா இருக்கும். வில்லனா நடித்த மலேசியா வாசுதேவன் நடிப்பு, டயலாக் டெலிவரி அருமை. சந்திரசேகர் தொழிலாளியின் கஷ்டங்கள், போராடுற நபராக அருமையாக நடித்துள்ளார். படத்துல ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு கேரக்டரைக் கொண்டு வந்து விறுவிறுப்பைக் கொண்டு வந்திருப்பார்கள்.

எல்லாருக்கும் நல்ல பர்ஃபார்மன்ஸக் கொடுத்திருப்பாங்க. படத்துல ரொம்ப மிரட்டுற வில்லனா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். டயலாக்கே கிடையாது. லோகேஷ் கனகராஜ் கூட ரீமேக் பண்ணனும்னா ஊமை விழிகள் பண்ணுவேன்னு சொன்னாராம். படத்தில் குதிரை வண்டியில் வில்லன் ரவிச்சந்திரன் வரும் சீன் மிரட்டலாக இருக்கும். இது ஒரு மிஸ்ட்ரிகல் த்ரில்லர்.

புதுசாகத் திரைப்படம் எடுக்க வரும் மாணவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து கவனிக்க வேண்டும். போலீஸ் கெட்டப்னாலே கேப்டனுக்கு மட்டும்தான் அது பொருத்தமா இருக்கும். அதுதான் ஊமைவிழிகள். ஆபாவாணன் வழங்கிய அடுத்த வெற்றி படம் உழவன் மகன்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top