விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான எம்.பாஸ்கர் என்பவரின் மகன் பாலாஜி பிரபு சில ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இவரும் தயாரிப்பாளர்தான். விஜயகாந்தை முதன்முதலாக பார்க்கும்போது எப்படி இருந்தார் என்பது குறித்து இவர் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
படைத்தலைவன் படத்தோட டிரெய்லர் பார்த்தேன். நல்லாருந்தது. சண்முகப்பாண்டியனைப் பார்க்கும்போது விஜயகாந்த் மாதிரியே கருப்பு, களை, உயரம்னு எல்லாமே அவருக்கிட்ட இருக்கு. அவரு யானை மேல இருந்து இறங்குறது, அந்த லுக் எல்லாமே அட்ராக்டிவா இருந்தது. ஆரம்பகாலத்துல விஜயகாந்த் நடிச்ச ஈட்டி, சாட்சி படங்கள்ல இருந்த மாதிரி இருந்தது.
விஜயகாந்த் சாரையே மறுபடியும் பார்க்குற மாதிரி இருக்கு. இளையராஜா தான் மியூசிக். அவர் இசை விஜயகாந்தின் ஆரம்பகாலப்படங்களில் பிளஸ் பாயிண்டா இருந்தது. இந்த காம்போ எப்படி ஹிட் ஆனதோ, அதே மாதிரி சண்முகப்பாண்டியன், இளையராஜாவின் காம்போவும் பழைய நினைவுகளைக் கொண்டு வருது.
யார் யாரோ ஜெயிக்கிறாங்க. அவரோட மகனும் பெரிய அளவில் ஜெயிக்கணும். அவரைப் பெரிய நடிகனா கொண்டு போய் உட்கார வைக்கிறதுதான் விஜயகாந்துக்கு நாம செய்யுற மரியாதை.
விஜயகாந்த் அப்பாவும், எங்க பெரியப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அப்போ விஜயகாந்த் எங்க அப்பாவிடம் வாய்ப்பு கேட்கறதுக்காக பெரியப்பாவிடம் போய் சிபாரிசு கடிதம் கேட்டாங்க. அவரும் ‘மதுரை வீரன் நீங்க. உங்களுக்குத் தராம வேற யாருக்குக் கொடுக்கப் போறேன்’னு சிபாரிசு கடிதம் உடனே எழுதிக் கொடுத்தாரு.
அதை எடுத்துட்டு வர்றாரு. 80களின் தொடக்கமா இருக்கும். விஜயகாந்த் சார் கதவைத் தட்டுறாரு. நான் தான் பார்த்தேன். பார்த்தா ரஜினி சார் நிக்கிற மாதிரியே இருக்கு. நான் பார்த்துட்டு ரஜினி சார் ரஜினி சார்னு பதட்டமாகிட்டேன்.
அப்பாவிடம் போய் ‘ரஜினி சார் வந்துருக்காரு’ன்னு சொல்றேன். ‘என்னடா உளர்றே…’ன்னாரு. ‘இல்ல ரஜினி சார் வந்துருக்காரு’ன்னு சொன்னேன். ‘என்னடா சொல்ற..’ன்னு வந்து அப்பா பார்க்குறாரு. அப்புறம் விவரத்தை விஜயகாந்த் சொன்னாரு. ‘ரஜினி மாதிரியே நீங்க லுக்கா இருக்கீங்க…’ன்னாரு அப்பா.
பைரவி படத்துக்கு அப்புறம் அடுத்த வாய்ப்பு இல்லாம தேடிக்கிட்டு இருக்கேன். அடுத்து வாய்ப்பு வரும்போது கண்டிப்பா கூப்பிடுறேன்’னாரு. அப்புறம் கிளம்பி போகும்போது கீழே புல்லட் நிக்குது. நான் ‘அங்கிள் புல்லட் சூப்பர்’னு சொன்னேன்.
‘வர்றீயா தம்பி. ஒரு ரவுண்டு போலாம்’னாரு. நான் எதையுமே யோசிக்கல. உடனே சப்பல் கூட போடாம போனேன். சாக்லெட் வாங்கித் தந்து திருப்பிக் கொண்டு வந்து இறக்கி விடறாரு. அப்புறம் விஜயகாந்த் பெரிய நடிகரானார். ‘புரட்சிக்கலைஞர்’ ஆகிற அளவுக்கு வளர்ந்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…