Connect with us

latest news

இங்கிலீஷ் பேசுவாருனு காத்திருந்த ரசிகர்கள்! ஹாலிவுட் படத்தில் சம்பவம் பண்ணிய ரஜினி

தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. அவருடைய இந்த 50 ஆவது வருடத்தை பொன்விழா ஆண்டாக கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான முயற்சிகளும் நடிகர் சங்கம் சார்பாக எடுக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக அவருக்கு இந்த விழா எடுத்து ஆக வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கின்றது.

மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து வந்து அதுவும் தமிழே தெரியாத ஒருவர் இன்று தமிழ் மக்களின் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சாதனை. ரசிகர்கள் மொத்தமும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்த திரையுலகில் நிலைத்து நிற்கிறார் என்றால் சாதாரண காரியமா.

அவருடைய வாழ்க்கையையே ஒரு பயோபிக்காக எடுக்கலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட வலிகள், போராட்டங்கள் ,சாதனைகள் என பொதிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் ஹாலிவுட் படத்தில் ரஜினி நடித்து அதில் அவர் இங்கிலீஷ் பேசுவாரா மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் ஒன்றை ரசிகர் ஒருவர் கூறியது இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது.

ஆரம்பத்தில் தலைவரின் ஹேர் ஸ்டைல் சைடில் வகுடு எடுத்து அவர் தலையை அப்படியே தூக்கி காட்டும் போது அவருடைய ஒட்டுமொத்த தலைமுடியும் பறந்து பின்னாடி வந்து விழும். அதை பார்ப்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அந்த ஹேர் ஸ்டைலை மாற்றியது பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்தில் தான். அதில் அவருடைய தலை முடி மேல்வாட்டில் சீவி அந்த படத்தில் இருந்து தான் அந்த ஹேர் ஸ்டைல் மாறியது.

அந்த படத்தில் தலைவர் இங்கிலீஷ் எப்போது பேசுவார் என எதிர்பார்த்த போது ஆரம்பத்தில் அவர் பேசிய வார்த்தை என்ன தெரியுமா? கண்ணா ரெண்டு பரோட்டா. சால்னா என்பதுதான். சரி எந்த இடத்திலாவது இங்கிலீஷ் பேசுவாரு என எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது படத்தின் கிளைமாக்ஸில் வில்லனை அடிக்க தலைவர் போவார். அப்போது ஒரு பாம்பு அங்கே எட்டிப் பார்க்கும்.

அந்த இடத்தில் தலைவர் பேசியது என்ன தெரியுமா ?இந்தியன் கோப்ரா. வெரி வெரி டேஞ்சரஸ் என்று சொல்லி இருப்பார். கடைசி வரைக்கும் அந்தப் படத்தில் இங்கிலீஸ் பேசியிருக்கவே மாட்டார் தலைவரு. இருந்தாலும் அதுவும் இங்கிலீஷ் தானே? ஹாலிவுட் படத்தில் இங்கிலீஷ் பேசாமல் நடித்த ஒரே நடிகர் எங்க தலைவர் தான் என அந்த ரசிகர் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top