Connect with us

latest news

யார் காலிலும் விழாத ரஜினி… அவர் காலில் விழுந்ததுக்கு இதுதான் காரணமாம்..! யாரப்பா அவரு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தை இப்போது ஜெய்ப்பூர்ல எடுத்துக்கிட்டு இருக்காங்க. அங்க ரஜினி தங்கி இருக்குற ஓட்டல் முன்னால ரஜினியைப் பார்க்கறதுக்கு ரசிகர்கள் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். கூலி படத்துல நேத்து வெளியிட்ட வீடியோ சாங்கை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 5.5 மில்லியனைக் கடந்துள்ளது.

கூலி படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். நாகர்ஜூனா தான் வில்லன் என்று சொல்றாங்க. அவருடைய காட்சிகள் எல்லாம் விசாகப்பட்டினத்துல எடுத்துட்டாங்க.

billa

billa

அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஜெய்ப்பூரில நடந்து வருகிறது. படத்துக்கு அடுத்தபடியாக சென்னையில் சூட்டிங் இருக்கும். மே மாதம் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

ரஜினியைப் பற்றி இன்னொரு சுவாரசியமான விஷயம் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. என்னன்னு பாருங்க.

கவியரசர் கண்ணதாசன் வீட்டை விட்டு வெளியே வந்தால் வாசல்ல 30 கார் நிற்குமாம். அது எல்லாம் அவருடைய பாட்டு கேட்டு புரொடியூர்கள் அனுப்பிய கார்கள். அதுல எந்தக் காருல அவர் ஏறுறாரோ அவருக்குத் தான் பாட்டு. மீதி எல்லாரும் மறுநாள் தான் வரணும். அப்படிப்பட்ட கவிஞர் பில்லா படத்துக்கு கே.பாலாஜியோட தயாரிப்புல பாட்டு எழுதப் போறாரு.

கே.பாலாஜி ரொம்ப தயங்குறாரு. ஏன்னா கவிஞருக்கு ரொம்ப கோபம் வந்துடும். அப்போது கே.பாலாஜி அவரிடம் மெதுவாகச் சொல்கிறார். ‘சார் நம்ம படத்து ஹீரோ ரஜினி… இவரைப் பத்தி இப்போ தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க. தப்பு தப்பா எழுதிக்கிட்டு இருக்காங்க. இவருக்கு மனநிலை சரியில்லை.

எங்கே போனாலும் கலாட்டா பண்றாரு. இவரு மனநிலை மருத்துவமனையில இருக்காரு. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்குது. அவரு இமேஜைக் கொஞ்சம் கூட்டுற மாதிரி ஒரு பாட்டு ஒண்ணு… வேணும்’னு சொல்றாரு.

‘எழுதிடலாமே… நல்லா வளர்ந்துக்கிட்டு இருக்காரே தம்பி’ன்னு சொல்லித் தான் அந்தப் பாட்டை எழுதுறாரு கண்ணதாசன். ‘நாட்டுக்குள்ள எனக்கொரு ஊரிருக்கு. ஊருக்குள்ள எனக்கொரு பேரிருக்கு’ன்னு ஒரு பாடலை எழுதுறார்.

rajni kannadasan

rajni kannadasan

எப்படி எழுதுறாருன்னு பாருங்க. ஒரு மனிதனுக்கு அங்கிருந்து கொண்டு வர்ற விஷயம். அதனால தான் யார் காலிலும் விழாத ரஜினி கண்ணதாசனின் காலில் விழுறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1980ல் சுரேஷ் பாலாஜி தயாரித்த படம் பில்லா. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ரஜினி, ஸ்ரீபிரியா, பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top