Connect with us

latest news

சண்டைக்கலைஞருக்கு பெயர் வைத்த ரஜினி… ஆனா அவரு பட்ட பாட்டைப் பாருங்க..!

தளபதி தினேஷ் பாட்ஷா, சந்திரமுகி படத்தோட ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் ஒரு காட்சியில் இவரைக் கொன்றுவிட்டு தளபதி ஆகி விடுவார். இதை இன்னொரு சம்பவத்தில் அவரிடமே நேரில் சொல்லிக் காட்டி இருக்கிறார் ரஜினி. என்னன்னு பாருங்க.

எஜமான் படத்துக்கு ராஜமுந்திரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சூட்டிங் நடந்ததாம். அந்தப் படத்தில் தளபதி தினேஷ் செம்பட்டை என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ரஜினி ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு என்ன மாதிரி தங்க வசதரி செஞ்சிக் கொடுக்குறீங்களோ அதே மாதிரி பண்ணிக் கொடுத்தா போதும்னு எளிமையா இருந்தாராம் ரஜினி.

அதனால ரஜினியும் அங்கேயே தங்கி விட்டார். மறுநாள் காலையில் தளபதி தினேஷ் எழுந்து உடற்பயிற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். எதிர்பால்கனியில் ரஜினி தம் அடிச்சிக்கிட்டு இருந்தார். அவர் ‘என்ன தளபதி எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டார். சார் ‘என்னைக்கும் நீங்க தான் தளபதி.

நான் வந்து தினேஷ் தான்’னு சொன்னேன். ‘தளபதி படத்துல உங்களை நான் சாகடிச்சிட்டு உங்க இடத்தை பிடிச்சிருக்கேன் . அதனால நீங்கதான் தளபதி’ன்னு சொன்னாரு. அதைக் கேட்டு நான் ஆடிப்போயிட்டேன். ஸ்டார் வேல்யுல உள்ளவங்க இப்படி சொல்வாங்களான்னு ஆச்சரியமா இருந்தது.

அதனால் தளபதி தினேஷ்னே பேரை மாத்திட்டேன் என்றார். அது மட்டுமல்ல. சந்திரமுகி படத்துல ரஜினி கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார். என்னன்னு அவரே சொல்றாரு பாருங்க. கன்னடப்படத்துல ஆஃப் தி மித்ரா என்ற படம் தான் சந்திரமுகியா வந்தது. அந்த கன்னடப் படத்துக்கு நான் தான் மாஸ்டர்.

அதனால சந்திரமுகிக்கும் நானே தான் மாஸ்டர்னு சொல்லிட்டாங்க. அதைக் கேள்விப்பட்ட ரஜினி என்னடா மாஸ்டர் ஆகிட்டியா? சொல்ல மாட்டியான்னு கேட்டாரு. உங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு தான் நான் சொல்லாம இருந்தேன்னு சொன்னேன். உடனே சந்திரமுகியில ஆஃப் தி மித்ரா படத்துல வர்ற விஷ்ணுவர்த்தன் மாதிரி காலைத் தூக்கி கிக் ஷாட் வைக்கணும்.

அதை சேலஞ்சா எடுத்துக்கிட்டு படத்துல அவரை டூப் போடாமல் நடிக்க வைச்சேன். அது போஸ்டரா வந்தது. இந்தப் படம் முடியட்டும். என்னோட தனிப்பட்ட முறையில உனக்கு 25 ஆயிரம் ரூபாய கிஃப்ட்டா கொடுக்குறேன்னாரு.

அதுமாதிரி கொடுப்பாருன்னு காத்துக்கிட்டே இருந்தேன். ஆனா அவரு மறந்துட்டாரான்னும் தெரியல. படம் 25வது நாள், 50வது நாள், 100வது நாள், 125வது நாள், 175வது நாள் என வெள்ளி விழா வரை ஓடிடுச்சு. அதுவரை தரவே இல்லை. மறந்துருந்தா நாம ஞாபகப்படுத்தலாமா? வாசு சார், பிரபு சார்லாம் என்ன நினைப்பாங்க?

ரஜினி சார் கையால அந்தத் தொகையை வாங்கணுமேன்னு எனக்கு ஒரு பக்கம் ஆசை இருந்தது. அப்புறம் ஒருநாள் திடீர்னு ஒரு போன் வந்தது. அன்னைக்கு ராகவேந்திரா கல்யாணமண்டபடத்துக்குப் போனேன். சொன்ன மாதிரி அந்தத் தொகையைக் கொடுத்தார் ரஜினி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top