latest news
கவுண்டமணிகிட்ட அப்பவே சொன்ன ரஜினி… அட அது அப்படியே நடந்துடுச்சே! தீர்க்கதரிசியா இருப்பாரோ?
Published on
கவுண்டமணியை பேட்டி எடுக்க வந்தா ஒரு விஞ்ஞானியை எடுங்க. இல்லன்னா விவசாயியை எடுங்க. எதுக்குய்யா ஒரு நடிகனை வந்து எடுக்குகுறீங்கன்னு கேட்பாராம். அந்த வகையில அவர் எம்ஆர்.ராதா மாதிரி. நடிப்புங்கறது ஒரு தொழில். அதை ஏன்யா இவ்ளோ பில்டப் பண்றீங்கன்னு தான் கேட்பாரு.
அவரு மனைவி, பசங்களைப் பற்றி எல்லாம் வெளியில பேச மாட்டாரு. அவரோட மனைவி சாந்தி மறைவுக்குப் பிறகு அது செய்தியா வெளியே வருது. அதைத் தவிர்க்க முடியாது. மார்க்கெட்ல இருக்குற நடிகர் வீட்டுல ஒரு துக்க நிகழ்வு அல்லது ஒரு சந்தோஷமான நிகழ்வுன்னா மொத்த பேரும் வந்துருவாங்க. அது வந்து மார்க்கெட்ல இருக்காருங்கறதுக்கு. எப்பவோ கவுண்டமணி வந்து நடிக்கிறதை நிறுத்திட்டாரு. இப்ப ஒரு படம் ஒத்த ஓட்டு முத்தையா வந்துருக்கு. அவ்ளோதான்.
மற்றபடி பழைய நட்பு, அவரு திரையுலகத்தில பண்ணின சாதனை எல்லாம் மனசுல வச்சித்தான் ஓடி வாராங்க. சத்யராஜ் அவரு குளோஸ் ப்ரண்டு. அவரு, விஜய் எல்லாம் வந்துட்டாங்க. ஆனா ரஜினி சென்னையில இல்ல. இருந்துருந்தா கட்டாயம் வந்துருப்பாரு. ரஜினிக்கு எல்லாம் கவுண்டமணி அப்படி ஒரு இன்ஸ்ப்ரேஷன்.
ரஜினி, கவுண்டமணி எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்டா இருந்த காலத்துல கார் வந்து பிக்கப் பண்ணிட்டுப் போய் திரும்ப சூட்டிங் முடிச்சதும் இறக்கி விடும். அப்போ வடபழனி தான் பாயிண்ட். ரஜினிக்கு வீடு மியூசிக் அகாடமி பக்கத்துல தான். கவுண்டமணிக்கு அதையும் தாண்டிப் போகணும். அப்போ கார்ல வந்து மொத்த பேரையும் திணிப்பாங்களாம்.
எல்லாரையும் இறக்கிவிட்டதும் ரஜினி, கவுண்டமணியைக் கடைசியாகத் தான் இறக்கி விடுவாங்களாம். அப்போ ஒருமுறை ரஜினி ரொம்ப ஃபீல் பண்ணினாராம். ‘பசிக்கும். மறுபடியும் தூங்கிட்டு காலைல எழுந்து வரணும். இதுக்கு நடந்தே போயிடலாம்’னாராம். காருல கூட்டம் அதிகம். ஒருமுறை நடந்தே போனாங்களாம்.
கவுண்டமணியும், ரஜினியும் வடபழனில இருந்து பேசிக்கிட்டே வந்தாங்களாம். அப்போ இருவரும் பேசும்போது ‘நாம தினம் ஒரு கார்ல போவோம்’னு சொன்னாங்களாம். கவுண்டமணிக்கிட்ட ரஜினி ‘உனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வரும் அண்ணேன்’னு சொன்னாராம். அப்படி சொன்னதுக்கு ஏற்ப கவுண்டமணி 8 கார் வச்சிருந்தாராம். தினம் ஒரு கார்ல வந்து இறங்கினாராம். மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார்.
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
Karur Vijay: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் சென்றிருந்த போது அவர்...
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...