கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். இருவரின் படங்களுக்கும் ஆரோக்கியமான போட்டி இருக்கும். கமல் படம் குறித்து ரஜினி சிலாகித்துள்ளார். ஆனால் ரஜினி படம் குறித்து கமல் வாயே திறக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்தது. இது ஆச்சரியம் தான்.
பாலசந்தரிடம் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அப்போது அவர் ஏக் துஜே கேலியே படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தார். சென்னையில் ரஜினியின் தில்லு முல்லு சூட்டிங் நடந்தது. சென்னைக்கு வந்த சுரேஷ்கிருஷ்ணாவுக்கு கமல், ரஜினி படங்கள் என்றால் வில் பூட்டாக இருக்கும் என்பது தெரிந்து இருந்தது.
அந்த வகையில் பாலசந்தரின் யூனிட் ஆள்கள் சுரேஷ்கிருஷ்ணாவை மேக்கப் ரூமுக்குள் அழைத்துப் போகிறார்கள். அங்கு ரஜினிக்கு மேக்கப் நடக்கிறது. இவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. பாலசந்தரின் அசிஸ்டண்ட். ஏக் துஜே கேலியே யூனிட்ல இருந்து வர்றாருன்னு ரஜினியிடம் அறிமுகப்படுத்தினர்.
அதற்கு ரஜினியும் கைகொடுத்து விட்டு ஏக்துஜே கேலியேவில் நடித்த கமல் பற்றியும் சூட்டிங் குறித்தும் கேட்கிறார். தொடர்ந்து கமலைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்கிறார். பெஸ்ட் ஆக்டர். அவரது நடிப்பு தமிழகத்துக்குள் அடங்கக்கூடாது. அவருக்கு முதல் இந்திப்படம். இந்தியா முழுக்க அவரது நடிப்பை ரசிக்க வேண்டும். ‘ஆல் தி பெஸ்ட்’னு சொல்கிறார்.
இதைக் கேட்டு சுரேஷ் அதிர்ச்சி அடைகிறார். நாம இருவரும் பரம எதிரிகள்னு நினைச்சோமே. இவர் இப்படி பேசுறாரேன்னு பார்த்துள்ளார். அதே நேரம் கமல் ரஜினி குறித்து ஏதாவது சொல்வார்னு பார்த்தாங்களாம். அதனால் கமல் தளபதி படம் குறித்து ஏதாவது சொல்வாருன்னு நினைச்சாங்களாம். ஆனால் சொல்வாருன்னு காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்.
கமல் நடித்த ஏக் துஜே கேலியே படம் பாலிவுட்டையே புரட்டிப் போட்டது. அதே போல மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படம் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மணிமகுடமாக இருந்தது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…