Connect with us

latest news

ரஜினி நடிப்புல அரசியல் வசனம் தூக்கலா இருந்த படம்… இப்ப பார்த்தாலும் மேட்சிங்கா இருக்கே!

அரசியலுக்கு வர்றேன் வர்றேன்னு சொன்னவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் தன் உடல்நிலை காரணமாக பின்வாங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கமலும், ரஜினியும் அரசியல் களத்தில் குதித்து விட்டனர்.

ரஜினியைப் பொருத்தவரை பல படங்களில் அரசியல் வசனங்கள் பேசி இருக்கிறார். ஆனால் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. உதாரணமாக அவரது பாடல்களில் எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்று வரிகள் வரும்.

முத்து: இன்னொரு பாடலில் ஒரு கட்சியும் வேணாம் எந்தக் கொடியும் வேணாம்னு வரிகள் வரும். அதே போல முத்து படத்தில் அறிமுகமே ரஜினியின் டயலாக் மாஸாக இருக்கும். ‘நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்வாரு.

அப்போ தான் ரஜினியோட அரசியல் களம் சூடுபிடித்தது. அவர் விரைவில் அரசியலில் குதித்துவிடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ‘வருங்கால முதல்வரே’ என்று ரசிகர்கள் வால்போஸ்டர் ஒட்ட ஆரம்பித்தனர். அது மட்டும் அல்லாமல் ரஜினி ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து தனித்தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

அண்ணாமலை: அவருடைய படங்களைப் பொருத்த வரை போலி அரசியல்வாதிகளுக்கு சாட்டையடிக் கொடுக்கும் வகையில் அண்ணாமலை படத்தில் ஒரு வசனம் வரும். ‘சம்பாதிக்குறதுக்கு ஆயிரம் தொழில் இருக்கு. புனிதமான அரசியலைப் பாழாக்கிடாதீங்க’ன்னு சொல்வார்.

அந்த வகையில் ரஜினி நடிப்புல வந்த குருசிஷ்யன் படத்தில் அவர் பேசி நடிச்ச அரசியல் வசனங்கள் மாதிரி வேறு எந்தப் படத்துலயாவது அரசியல் வசனம் பேசி நடிச்சிருக்காரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் அரசியல் பேசி இருக்கிறார். குரு சிஷ்யன் திரைப்படத்தில அந்த அரசியல் வசனங்கள் கொஞ்சம் தூக்கலாக அமைந்து இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். குருசிஷ்யன் படத்தைப் பொருத்தவரை அதன் ஓபனிங் சாங்கே அரசியல் தான்.

குரு சிஷ்யன்: ‘நாற்காலிக்குச் சண்டை போடும் நாடு நம் பாரத நாடு’ என்று வரும். அந்த ஒரே பாடல்ல நம்ம நாட்டோட அரசியலைச் சொல்லி இருப்பாங்க. 1988ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் குரு சிஷ்யன். ரஜினி, கவுதமி, சோ, பிரபு, பாண்டியன், ராதாரவி, ரவிச்சந்திரன், செந்தாமரை, வினுச்சக்கரவர்த்தி, மனோரமா, சீதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top