Categories: latest news throwback stories

தியேட்டரில் அந்தப் பாடலுக்குக் கைதட்டிய ரசிகர்கள்… புரியாமல் விழித்த ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.க்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதில் இருந்து சில தொகுப்புகளைப் பார்ப்போம்.

எம்எஸ்.விக்கு பாராட்டு விழா: எம்எஸ்.விஸ்வநாதனின் பாராட்டு விழாவில் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் எல்லாருடைய ஜூனியர் சினிமா இன்டஸ்ட்ரில நான்தான். அவர்களைப் புகழ்வதற்கோ, பாராட்டுவதற்கோ இசைஞானி இளையராஜா, கமல், கே.பாலசந்தர் சார் இவங்களே தயங்கும்போது எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. ஏன்னா என்னோட படங்கள்ல நிறைய அவங்க வேலை செய்யல.

மீனிங்கே தெரியாம பாடுவாங்க: ஆனா பெங்களூருவுல நான் இருக்கும்போது தமிழ் தெரியாத கன்னடர்கள் ‘போனால் போகட்டும் போடா’ சாங் பாடுவாங்க. அதனோட மீனிங்கே தெரியாமல். அதே மாதிரி ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்’ பாடல் பாடுறாங்க. அதோட மீனிங் தெரியாமல். பாலும் பழமும் படத்துப் பாடலும் பாடறாங்க.

சர்வர் சுந்தரம்: நான் வந்து சர்வர் சுந்தரம் படத்துக்கு முதல் நாள் தியேட்டருக்குப் போயிருந்தேன். அந்தக் கதையோட அம்சமே ஒரு சர்வர் சினிமா நடிகர் ஆகிறான் என்ற கதை. நானும் கண்டக்டராக இருந்து சினிமா நடிகர் ஆகணும்கற நினைப்புல இருந்த நாள்கள். அதனால அந்தப் படம் பார்க்கப் போறேன்.

படத்துல ‘அவளுக்கென்ன அழகிய முகம்’னு பாடல் வருது. அதுல மியூசிக் கம்போசிங் பண்ற மாதிரி ஒரு மியூசிஷியன் வரும்போது தியேட்டரே வந்து எம்ஜிஆர், சிவாஜி சார் படத்துல முதல்ல வரும்போது எப்படி கிளாப் அடிக்கிறாங்களோ அப்படி கிளாப் அடிச்சாங்க எல்லாரும்.

புரியவே இல்லை: எனக்குப் புரியவே இல்லை. எதுக்கு வந்து கைதட்டுறாங்க? எதுக்கு ஆரவாராம்னு பக்கத்துல இருக்குறவர்கிட்ட கேட்டேன். அந்த சூட்டுப் போட்டுட்டு வந்து மியூசிக் கண்டக்ட் பண்றாங்க இல்லையா. அவர்தான் எம்எஸ்.விஸ்வநாதன். அவருக்கு நாம கைதட்டுறோம்னாரு. ஒரு இசை அமைப்பாளருக்கு அவ்ளோ பேன்ஸ்.

நான் ஆச்சரியமா ஆகிட்டேன். அதுக்கு அப்புறம் அபூர்வ ராகங்கள் படத்துல நடிக்கும்போது அவரைப் பார்த்தேன். நான் வந்து சினிமாவுல பார்த்ததுக்கும், நேரில பார்த்ததுக்கும் சம்பந்தமே இல்லை. காவி உடை இல்லை. அவ்ளோதான்.

மூன்று முடிச்சு: திருநீறு, சந்தனம், குங்குமத்தோடு இருந்தாரு. எனக்கு மூன்று முடிச்சு படத்தில் ‘மனவினைகள் யாருடனோ’ பாடலுக்கு அவர்தான் குரல் கொடுத்தார். அப்புறம் நினைத்தாலே இனிக்கும் ‘சம்போ சிவசம்போ’ எல்லாம் அவர்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v