கவியரசர் கண்ணதாசன் தமிழ்சினிமாவில் ஆழமான தத்துவம் நிறைந்த பாடல்களையும், காதல் ரசம் சொட்டும் தேனினும் இனிய பாடல்களையும் எழுதியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி பாடல்களில் பெரும்பாலானவை இவர் எழுதிய பாடல்கள்தான். எல்லாப் பாடல்களுமே சூப்பர்ஹிட் தான். அந்த வகையில் இவர் இந்து மதம் சார்ந்த பல நல்ல கருத்துகளையும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இவருக்கு ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாமல் போகுது. அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அப்போது நடிகை சரோஜாதேவி அவரைப் பார்க்கிறார். அவர் கண்ணதாசன் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
மழலைத் தமிழ்: தமிழகத்தில் கண்ணதாசனின் தமிழ் பெரிசா இருக்கலாம். ஆனா அப்படிப்பட்ட கவிஞருக்கே என் பொண்ணு பேசுற மழலைத் தமிழ் தான் ரொம்ப பிடிக்கும். இந்தப் பொண்ணு பேசுற தமிழ் சொக்க வைக்குதே விஸ்வநாதா, நல்ல பாட்டுப் போட்டுடலாம்னு சொல்வாராம் கண்ணதாசன்.
கவிஞர் எப்போது பெங்களூரு வந்தாலும் முன்னதாகவே சொல்லிடுவாரு. என்னுடைய வீட்டுல இருந்துதான் அவருக்கு சாப்பாடு போகும். அமெரிக்காவில் அவர் உடல் நம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவரை கடைசியாக பார்த்தது நான்தான். அப்போது கூட சீக்கிரம் நான் திரும்பி வந்துடுவேன். எனக்கு சாப்பாடு அனுப்புன்னுதான் சொன்னார்.
ஏன் சோர்வு?: கவிஞரைப் பொருத்தவரை அவர் எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்தோடுதான் பேசுவார். ஆனால் அமெரிக்காவில் இருந்தபோது அவர் மிகவும் சோர்வாக இருந்தார். ஏன் இப்படி இருக்கீங்கன்னு சரோஜாதேவி கேட்டபோது வயசாயிடுச்சு அம்மான்னாராம்.
விடாமல் சிரிப்பு: அப்புறம் ‘என்ன உனக்கு இப்ப சிரிக்கணும். அவ்வளவுதானே’ன்னு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சிரிச்சிக்கிட்டே இருந்தாராம். அப்போ ‘சிரிச்சது போதும். டாக்டர் வந்து திட்டப் போறாங்க’ன்னு சரோஜாதேவி சொன்னாராம்.
‘சீக்கிரமே சென்னைக்கு வாங்க. உங்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கிறேன்’னும் சொன்னாராம். இன்றைக்கு அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவருடன் பழகிய நாள்கள் இன்று வரை என் மனதிலே பசுமையாக இருக்கிறது என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே சரோஜாதேவி தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…