latest news
எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த பாடல் அதுதானாம்… பாடகி சுசீலாவே சொன்ன தகவல்
Published on
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 60ம் ஆண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா கலந்து கொண்டு எம்ஜிஆரின் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தார். அப்போது எம்ஜிஆர் குறித்தும் அவரது பாடல்கள் குறித்தும் பல பாடல்களைப் பகிர்;ந்து கொண்டார்.
காலத்தை வென்றவன் நீ என்ற அந்த ஒரு பாடல் போதும். காலத்தை வென்றுட்டார் எம்ஜிஆர். 50 வருஷம் ஆனாலும் மேடையில் இந்த பங்ஷன் நடக்குதுன்னா அவர் கரெக்டா தான் சொல்லிருக்காரு.
காலத்தை வென்றவன் நீ. ‘உன்னை நான் சந்தித்தேன். நீ ஆயிரத்தில் ஒருவன். என்னை நான் கொடுத்தேன். நீ ஆயிரத்தில் ஒருவன். ஆலயத்தில் ஒருவன்…’ என்று அவ்வளவு சூப்பர்ஹிட் பாடல் அவருக்குத் தான் பொருந்தும்.
நம்பிக்கையின் புகழ்விளக்கு: எம்.எஸ்.வி. ஐயா எம்ஜிஆர் என்ன சொன்னாலும் ‘டகார் டகார்’னு போட்டுருவாரு. அதெல்லாம் பொற்காலம். ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு. தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் புகழ்விளக்கு’ என்ற பாடலுக்கும் காலத்தை வென்றவன் பாடலுக்கும் சரியாக இருக்கும்.
நாங்க எல்லாம் ஓல்டு பீப்பிள். பழைய பாடல் பாடுறோம். ஆனா இப்ப இருக்குற குழந்தைங்க கூட எங்க பாட்டைப் பாடுறாங்க. அதுக்குக் காரணம் எம்ஜிஆருதான்.
காலத்தை வென்றவன்: எஸ்.பி.பாலு பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் அவ்வளவு அருமையா இருக்கும். ஹலோ ஹலோ சுகமா ஆமா நீங்க நலமா என்ற பாடல் எந்த மாதிரியான பாட்டு? தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்…. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என அசத்தலான பாடல்கள் எல்லாமே அவருக்குத் தானே சொந்தம் என்பதைப் போல பி.சுசீலா பாடி அசத்தினார். அவ்வப்போது காலத்தை வென்றவன் எம்ஜிஆர் என்றும் சொன்னார்.
பச்சைக்கிளி முத்துச்சரம்: என்னையும், எஸ்.ஜானகியையும் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலை பாடச் சொன்னார். பாடுங்கோ பாடுங்கோன்னு வேர்க்கடலையை சாப்பிட்டுக்கிட்டு அங்கேயே இருக்காரு. பிரமாதமா வந்தது. காலத்தை வென்றவன் பக்கத்துலயே இருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1973ல் எம்ஜிஆர் தயாரித்து நடித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். அவருடன் இணைந்து மஞ்சுளா, லதா, சக்கரபாணி, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்வியின் இசையில் 10 பாடல்களும் அருமை.
10 பாடல்கள்: அவள் ஒரு நவரச, பன்சாயி, லில்லி மலருக்கு, ஓ மை டார்லிங், நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும், தங்கத் தோணியிலே, உலகம் உலகம், வெற்றியை நாளை ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில்தான் உள்ளன. காலத்தை வென்றவன் நீ என்ற பாடலும் எம்ஜிஆரின் சொந்தப் படமான அடிமைப் பெண்ணில் தான் வருகிறது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை...
TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர்...
Vijay TVK Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று கரூருக்கு பரப்புரைக்காக சென்ற போது அங்கு கூட்டத்தில்...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று அங்கு...