Categories: latest news throwback stories

சிவாஜிக்கு நடிகர் திலகம் பெயர் வரக் காரணமான படம்… அதுல இவ்ளோ சிறப்புகளா?

சிவாஜிக்கு முதன்முதலில் நடிகர்திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது இந்தப்படத்தில்தான்… அப்படின்னா அது எந்தப்படமா இருக்கும்னு தெரிய ஆவலாக உள்ளது அல்லவா… வாங்க பார்க்கலாம்.

சிறப்புகள்: இந்தப்படத்தில் பல சிறப்புகள் உள்ளன. அதாவது படம் முழுக்க கருப்பு வெள்ளை. பாட்டு மட்டும் கலர். பாரதிதாசன் விலகியது, என்எஸ்கே.வின் இறப்பு, தியாகராஜ பாகவதரின் மறுப்பு என பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றது இந்தப் படம்.

20 ஆண்டுகள்: 1957ல் வெளியான அம்பிகாபதி தான் இந்தப் படம். இதுல தியாகராஜ பாகவதர் சிவாஜியின் அப்பா கம்பராக நடிக்க மறுத்து விட்டார். 1937ல் பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படம் வெளியானது. அதில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து சிவாஜியின் அம்பிகாபதி படம் வெளியானது. அவருக்கு ஜோடியாக பானுமதி நடித்தார். அவர்களுடன் எம்.கே.ராதா, நாகையா, நம்பியார், ராஜசுலோச்சனா, ஏ.கருணாநிதி உள்பட பலர் நடித்தனர்.

பாரதிதாசன்: பாகவதர் நடிக்க மறுத்த கம்பர் கேரக்டரில் எம்.கே.ராதா நடித்தார். பாரதிதாசன் படத்திற்கு கதை, வசனம் எழுத ஒப்புக்கொண்டார். ஆனால் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகினார். அதற்குப் பதிலாக சக்தி டிகே.கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை, ம.லட்சுமணன் ஆகியோர் திரைக்கதை அமைத்தனர்.

என்எஸ்கே: இயக்குனர் ப.நீலகண்டன் வசனம் எழுதினார். என்எஸ்கே., அவரது மனைவி மதுரம் இருவரும் படத்தில் நடித்தனர். ஆனால் படம் வெளியாகும் முன்பே என்எஸ்கே இறந்து போனார். படத்தில் ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.

கலர்: இவர்தான் 20 ஆண்டுக்கு முன்பும் வெளியான அம்பிகாபதிக்கு இசை அமைத்தார். சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற டைட்டில் கார்டு இந்தப் படத்தில்தான் போட்டார்கள். படத்தில் 3 பாடல்கள் மட்டும் கலர் என்று பல புதுமைகளைத் தாங்கி வந்தது அம்பிகாபதி.

அம்பிகாபதி படத்தில் இத்தனை சிறப்புகளா என்று பார்க்கும்போதும், இத்தனை ஜாம்பவான்களுடன் தொடர்புடைய படமா என்று பார்க்கும்போதும் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v