Connect with us

latest news

எப்படி பேசினால் என்ன? எனக்கு தேவை டிஎம்எஸ்தான்.. சிவாஜி போட்ட ஆர்டர்!

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் வந்தபோதும் டிஎம்எஸ்.வந்ததும் இவருக்காகவே காத்திருந்தது போல தமிழ்த்திரை உலகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. இவரது ஆட்சிக்காலம் ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை இவருக்கு இணையான பாடகர்கள் யாரும் வரவில்லை.

இனி வரப்போவதும் இல்லை. முகமது ரபியைப் பார்த்துத் தான் பாடும் பாணியை இவர் வடிவமைத்துக் கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. பாகவதர் பாடும் பாணி தான் ஆரம்பத்தில் என்னுடையது என்று இவரே சொன்னதும் உண்டு.

டிஎம்எஸ் ஆலாபனை: முகமது ரபியே டிஎம்எஸ்சின் பாடல்களில் உள்ள ஆலாபனையைக் கண்டு இப்படி பாடினால் நான் செத்தே போயிடுவேன்னும் சொன்னதுண்டு. அந்த வகையில் டிஎம்எஸ் எப்போதும் தன்னைப் பெருமையாகப் பேசிக் கொள்வாராம். டிஎம்எஸ்சுக்கு மாற்றைக் கொண்டு வருவது என திரைப்படத்துறையும் ஒரு கட்டத்தில் எம்எஸ்வி.யும் கூட உறுதியாக இருந்துள்ளார்கள்.

அதே நேரம் சிவாஜியை எப்படியாவது சமாளித்து விடலாம் என்றும் நினைத்து ஒரு பாடலை வேறு பாடகரை வைத்துப் பாடச் செய்து விட்டார்கள். இது சிவாஜியின் காதுக்குப் போனது. யாரைக் கேட்டு இப்படி செஞ்சீங்கன்னு கேட்டுள்ளார் சிவாஜி. டிஎம்எஸ் பாடாமல் இருந்ததற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் சிவாஜி டிஎம்எஸ்தான் இந்தப் பாடலைப் பாட வேண்டும்.

சிவாஜியை கடுமையாகத் தாக்கிப் பேசியவர்கள்: வேறு யாராவது பாடி அதில் நடித்தால் நான் வாய் அசைக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டாராம். போல தேங்காய் சீனிவாசனும், அசோகனும் சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளனர். அரசியல் ரீதியாக அவர்கள் திமுகவில் இருந்துகொண்டு சிவாஜியைப் பற்றி கடுமையாகத் தாக்கிப் பேசுவார்களாம்.

ரீஷூட் எடுப்போம்: ஆனால் அப்படி பேசிவிட்டு மறுநாளே சிவாஜியுடன் நடிக்க வந்துள்ளார்கள். ஷூட்டிங்ஸ்பாட்டில் என்னாகப்போகுதோ, ஏதாகப்போகுதோன்னு படக்குழுவினர் தவித்துள்ளனர். ஏன்னா அவர்களது பேச்சு அன்று பத்திரிகையில் வந்துவிட்டது. சிவாஜியிடம் அவர்கள் நடிப்பது வேணாம்னா ரீஷூட் எடுப்போம்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு சிவாஜி காரணம் கேட்க அவர்கள் பத்திரிகையில் நடந்த விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். சிவாஜி எப்படியும் அவர்களைப் படத்தில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று நினைத்தார்களாம்.

சிவாஜியின் பெருந்தன்மை: ஆனால் சிவாஜியோ புன்முறுவல் பூத்தபடி அவர்களுக்கு அரசியலில் என்னைப் பற்றிப் பேசினால் தான் கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும். அப்படி இருக்கும்போது சினிமாவில் அவர்கள் மேல்வருமானத்துக்காக நடிக்க வர்றாங்க. அதை ஏன் நாம தடுக்கணும். அவங்க வயிற்றுப்பொழப்பில் அடிக்கணும். நடிக்கட்டுமே என பெருந்தன்மையாக நடிக்க வைத்தாராம் சிவாஜி.

கருத்து வேறுபாடு: அதே போல கண்ணதாசனுக்கும், சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு வந்தது நிஜம்தான். எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பது நிஜம்தான். ஆனால் அவர் வேறு. தொழில் வேறு. என் படத்துக்கு அவர்தான் பாட்டு எழுதணும். அவரு இல்லன்னா வேற யாரையாவது வச்சி பாட்டு எழுதிக்கோங்கன்னு சொன்னவர்தான் சிவாஜி. அந்த அளவுக்கு டிஎம்எஸ்சின் குரலை நேசித்தவர் சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top