latest news
குணா படத்துக்கு கதாநாயகி கிடைத்தது இப்படித்தான்!.. இது செம மேட்டரா இருக்கே!…
Published on
By
Guna Tamil movie: கமல்ஹாசனின் நடிப்பில் 1991ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் குணா. கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்கிய திரைப்படம் இது. இந்த படத்தில் ரேகா, ஜனகராஜ், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ரோஷ்ணி என்கிற புதுமுகம் நடித்திருந்தார்.
இந்த படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கமல் நடித்திருந்தார். தன்னை சிவனாக நினைத்துக்கொண்டு கதாநாயகியை கடத்திக்கொண்டு போய் கொடைக்கானல் மழையில் ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பார். துவக்கத்தில் கமலிடமிருந்து தப்பிக்க நினைத்தாலும் ஒருகட்டத்தில் அவரின் அன்பை புரிந்துகொண்டு அவரோடு வாழ கதாநாயகி முடிவெடுப்பார்.
ஒருபக்கம், பணக்காரியான அவரின் சொத்துக்களை அபகரிக்க ஒரு கூட்டம் அவரை தேடி வரும். அதேபோல், கமலை பிடிக்க போலீஸ் அதிகாரிகளும் அங்கே வர என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்தார் இளையராஜா.
அதிலும் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. குணா படத்தில் இடம் பெற்ற குகை மற்றும் கண்மணி பாடலை வைத்துதான் மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற படத்தை எடுத்தார்கள். 20 கோடி செலவு செய்து 200 கோடி வரை சம்பாதித்தார்கள். அதனால்தான், தனது அனுமதியில்லாமல் அந்த பாடலை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.
குணா படத்தில் கதாநாயகியாக நடித்த ரோஷ்ணி அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். அதோடு அவரின் அழகும் அந்த படத்திற்கு சரியாக இருந்தது. அதேநேரம், அந்த படத்திற்கு பின் ரோஷ்ணி வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. ரோஷ்ணி உண்மையிலேயே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.
பொழுது போக்கிற்காகவே மும்பையில் ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்துகொண்டிருந்தார். கதாநாயகியை தேடி மும்பை சென்றபோது இவரை ஒருவர் பரிந்துரை செய்திருக்கிறார். அவரை பார்த்த இயக்குனருக்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று தோன்றவே ரோஷ்ணி அந்த படத்தில் நடித்திருக்கிறார்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...