Categories: latest news throwback stories

உயிரைப் பணயம் வைத்து விஜயகாந்த் நடித்த காட்சி… ஸ்டண்ட் நடிகர் மிரண்டு போய் சொல்றாரே!

விஜயகாந்த் உடன் பணியாற்றியது குறித்தும் அவர் உயிரைப் பணயம் வைத்துப் படத்தில் நடித்த ஃபைட் குறித்தும் பிரபல ஸ்டண்ட் மேன் அழகு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

விஜயகாந்த் எல்லாம் ‘பேசிக்’ (பேசிக்) கத்துக்கிட்டு வந்தாங்க. அவரு இங்க வந்துதான் எல்லாம் கத்துக்கிட்டாரு. அவரு படங்கள்ல நிறைய பண்ணிருக்கேன். ஃபைட்ல நான் எல்லாம் கூட முடியாது. சுவத்துல ஒரு காலை வச்சி திரும்பி அடிப்பாரு. எப்படித்தான் பண்றாருன்னு தெரியல. அவரு திரும்பி அடிச்சி நிப்பாரு. என் பொண்ணு ஸ்காட்லாந்துல இருக்காங்க. அப்போ பார்க்கறதுக்குப் போறேன். லண்டன் போகும்போது பஸ்ல போறேன். அங்கே ஃப்ரண்டுல ஏறிறோம்.

அப்போ பேக்ல இருந்து ஒரு குரல். ‘அழகு சார் ‘செந்தூரப்பூவே’ல விஜயகாந்த் சார் டிரெய்ன் ஃபைட் என்ன ஃபைட்..?!’னு பாராட்டுறாரு. எனக்கு ஒரே ஆச்சரியம். சார் நான் ‘லண்டன் காரன் இல்ல. நான் சௌத் சைடுதான். இங்கே வந்து 35 வருஷம் ஆச்சு’ன்னு சொன்னன். இந்தப் பேரு இறைவனால வந்தது. அவரால எனக்குப் பேரு.

சார் இறந்ததும் டிரெய்ன் ஃபைட்டை அஞ்சாறு பேரு கட் பண்ணி அனுப்புனாங்க. வாரி வாரி வழங்கும் வள்ளல். செந்தூரப்பூவே படத்துல அவரும் நானும் இறக்க வேண்டியது. படுத்துக்கிட்டு மிதிப்பாரு. நான் பின்னால போகணும். 3 கேமராவை வச்சி எடுத்தாங்க. அது ரிஸ்கான இடம். டிரெய்ன் போய்க்கிட்டே இருக்கு. 26 குட்ஸ் இருக்கு. ‘ரன்னிங் டிரெய்ன். சுத்தி முள். கீழே விழுந்தா கல். வேண்டாம் ராஜா’ன்னாரு.

நான் இத்தனை கேமரா இருக்கு. நாம பண்றோம்னு நினைச்சேன். அதே மாதிரி பண்ணினேன். அப்போ பேக்ல போய் விழும்போது ஸ்லிப்பாகி சுதாரிச்சி அடுத்த பெட்டில விழுந்துட்டேன். அப்போ விஜயகாந்த் சார் ‘அழகு சார்..’னு எனக்கு ஏதோ ஒண்ணு ஆகிடுச்சுன்னு பயந்து அப்படியே கண் சிவக்கப் பார்த்தார். அதே மாதிரி அவ்வளவு இரக்கப்படுவாரு.

தன்னை மாதிரியே அடுத்தவரையும் நினைக்கக்கூடிய பண்பாளர். அவரும் ஒகேனக்கல்ல ஃபைட் பண்ணும்போது பாறையில சறுக்கி கை இறங்கிடுச்சு. ஒருத்தரும் வேணாம்னு அவரே அப்படியே தூக்கி வச்சாரு. என்ன துணிச்சல்? அவரு சுதாரிக்கலன்னா கீழே 50 அடி பள்ளம். வாட்டார் ஃபால்ஸ். மாஸ்டர் சொல்றாரு. ‘ராஜா நீங்க வேணாம். டூப் போடுவோம்’.

‘ஏன்?’ ‘ரொம்ப ரிஸ்க். ரன்னிங் டிரெய்ன்’னு சொன்னாரு. ‘ஏன் அவங்களுக்கு ரிஸ்க் இல்லையா?’ன்னு கேட்டாரு விஜயகாந்த். ‘அந்த டூப் போட்டு முடிச்சதும் அவங்களை இருக்கச் சொல்லுங்க. அவங்களுக்குத் தேவையானதை செய்யுங்க. பேமெண்ட் கொடுங்க’ன்னு சொல்வாரு. அதான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்காரு என்கிறார் ஸ்டண்ட் கலைஞர் அழகு.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v