Categories: latest news throwback stories

விஜயைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட சூர்யா… எல்லாத்துக்கும் படையப்பா தான் காரணமா?

செந்தூரப்பாண்டியைப் பார்த்ததும் சூர்யாவுக்கும் விஜயகாந்த் ஒரு படம் நடிச்சிக் கொடுத்தா நல்லாருக்குமேன்னு நினைத்துள்ளார் சிவக்குமார். ஆனால் அவரது நினைப்புக்கேற்ப சூர்யாவுக்கு விஜயகாந்த் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாம்.

விஜயகாந்த் தனது நீண்ட நாள் உதவியாளரான சுப்பையாவைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார். அதுதான் பெரியண்ணா படம். இந்தப் படத்தில் விஜயகாந்துடன் நடிப்பதற்கு இன்னொரு செகண்ட் ஹீரோ தேவைப்பட்டுள்ளார். யாரைப் போடலாம்னு நினைக்கும்போது சூர்யாவைப் போடுங்கன்னு விஜய் சொன்னாராம். அதனால் தான் சூர்யாவை நடிக்க வைத்துள்ளார் விஜயகாந்த். இது பற்றி கேள்விப்பட்டதும் சிவக்குமாருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

படம் 1992ல் வெளியானது. படத்துல சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். செந்தூரப்பாண்டி மாதிரின்னு நினைத்தவர்களுக்கு அப்படி அமையவில்லை. அதுதான் துரதிர்ஷ்டம். ஏன்னா விஜய்க்கு ஆரம்ப காலத்தில் பல படங்கள் தந்தையின் இயக்கத்தில் வந்தன. அவை பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.

அதற்கு சரியான ஆள் விஜயகாந்த் தான் என நலவிரும்பிகள் சொல்ல விஜயகாந்த் தனது குருநாதர் எஸ்ஏசிக்காக கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுத்த படம் தான் செந்தூரப்பாண்டி. அதுல விஜய் அவருடன் இணைந்து நடித்துள்ளார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விஜய்க்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

அந்த நம்பிக்கையில் அது போல தனக்கும் பெரிய பிரேக் கிடைக்கும் என சூர்யா எதிர்பார்த்தாராம். ஆனால் செந்தூரப்பாண்டி அளவுக்கு பெரியண்ணா ஹிட்டாகவில்லை. அதற்கு என்ன காரணம்னா ஏப்ரல் 10ம் தேதி 1999ல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா ரிலீஸ் ஆனது.

ஏப்ரல் 12ம் தேதி பெரியண்ணா ரிலீஸ். சூப்பர்ஸ்டார் என்ற ஒரு திமிங்கலத்துக்கு முன்னாடி நெத்திலி மீனாய் பெரியண்ணா தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படங்கள்னா படையப்பா, முதல்வன். அதே நேரம் பெரியண்ணா பெரிய தோல்வியும் இல்லை. பெரிய வெற்றியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v