Categories: latest news throwback stories

பாக்கியராஜை இங்கிலீஷ்ல கண்டபடி திட்டிய நடிகை… அப்புறம் நடந்தது தான் விசேஷம்!

நடிகர் பாக்கியராஜ் உடன் பணியாற்றிய போது நடந்த சுவையான அனுபவங்களை நடிகை ராதிகா பகிர்ந்து கொண்டார். அப்போது பாக்கியராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அந்த சமயம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா அறிமுகம் ஆகிறார். அப்போது என்ன நடந்ததுன்னு பாருங்க.

ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணு: பாக்கியராஜ் சார் முதல்ல அசோசியேட்டா இருந்தப்ப எனக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பார். நான் எங்கேயோ பார்த்துக்கிட்டு இருப்பேன். உடனே பாரதிராஜா சாருக்கிட்ட ‘ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணு சார்’னு கம்ப்ளைண்ட் பண்ணுவாரு. ‘இதுமாதிரி இந்தப் பொண்ணு சொல்ற பேச்சைக் கேட்குறது இல்ல. ரொம்ப மோசம் சார்’னு சொன்ன உடனே அவர் கூப்பிடுவாரு.

ஞாபக சக்தி அதிகம்: ‘என்ன சொல்ற பேச்சைக் கேட்க மாட்டேங்கறீயாமே. டயலாக் சொல்லச் சொன்னா சொல்ல மாட்டேங்கறீயாமே, ராஜன்?’ சொன்னான்னு சொல்வாரு. ‘இல்ல சார். அது பொய் சொல்லுது’ன்னு சொல்வேன். ‘அப்ப டயலாக் சொல்லு’ன்னு சொல்வார். எனக்கு வந்து ஞாபக சக்தி அதிகம்.

அவர் எழுதுன டயலாக் இது. ‘கையைக் கை தூக்கி கை மேல வச்சித் திங்குமாம் கை. கைகார மகன் கண்டுபிடிக்குன்னா கையைத் தூக்கிட்டு ஓடுமாம் கை. அது என்ன கை? சொல்லடி ஆத்தா. இதை மட்டும் சரியா சொல்லிட்டன்னா எட்டுக்கட்டு வெத்தலை, பட்டினம்பாக்கமும், மதுரை சீவலும் வாங்கித் தர்ரேன்’னு சொன்னேன். அதுக்கு அப்புறம் எனக்கு ஒரே வீராப்பு வந்துடுச்சு.

இங்கிலீஷ்ல திட்டிட்டேன்: நான் இங்கிலீஷ்ல இவரைப் பயங்கரமா திட்டிட்டேன். எனக்கு ஒரே பாவமாப் போச்சு. அப்புறம் நேரா போய் ‘சாரி ராஜன். நான் உங்களை இங்கிலீஷ்ல திட்டிட்டேன் ராஜன்’னு சொன்னேன். ‘பரவாயில்ல. பரவாயில்ல. எனக்கு இங்கிலீஷ் புரியல’ன்னுட்டாரு. அதுக்கு பாக்கியராஜ் சொன்னது இதுதான். ‘எங்க டைரக்டருக்கிட்டேயே சொல்வேன். அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்குன்னு சொல்வாங்க. அதுக்குக் கரெக்டான உதாரணம் இதுதான்யா’ன்னு என்றார் பாக்கியராஜ்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v