Categories: latest news throwback stories

எனக்கு வந்த முதல் வாய்ப்பு… தட்டிப் பறித்த பாலசந்தர்… எல்லாத்துக்கும் காரணமே கமல்தான்..! யாரா இருக்கும்?

இயக்குனர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம் என்றால் அவர் தேர்ந்த நடிகராகத் தான் இருப்பார் என்பார்கள். அப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு நடிகர் ராஜேஷூக்கு வந்தது. அந்த வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனதே என்ற கதை ஆகிவிட்டது. அவள் ஒரு தொடர்கதை படத்தில் முதலில் கமல் நடிக்கும் கேரக்டரில் ராஜேஷ்தான் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அந்த வேடத்திற்குக் கமல் தான் பொருத்தமாக இருப்பார் என்று பாலசந்தர் அவரைப் போட்டுவிட்டாராம்.அதன்பிறகு அவர் வேறு என்னென்ன முயற்சிகள் செய்தார்? இதுபற்றி நடிகர் ராஜேஷ் என்ன சொல்கிறார்னு பாருங்க.

நடிக்க வாய்ப்பு

சின்ன வயசுல எனக்கு நடிக்கிறதுக்குக் கூச்சம். 11 வயசுல இருந்தே எம்ஜிஆர், சிவாஜி மாதிரி நடிச்சி புகழ் பெறணும்னு நினைச்சேன். பாலசந்தர் சார் முதன் முதலா ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அப்புறம் கமலை அந்த கேரக்டர்ல போட்டுட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல.

rajesh kamal

என்னம்மோ நான் பெரிய நடிகர்னாரு. என்னைத் தூக்கிட்டாரு பாலசந்தர். நான் டைரக்டர் ஆகிக் காமிக்கிறேன் பாருன்னு சொல்லிட்டு இருந்தேன். அப்போ மகேந்திரன் சார், கலைஞானம் சார் இவங்களோட எல்லாம் பழக்கம். எங்க அப்பாவோட அக்கா பையன் மகேந்திரன்.

எம்ஜிஆர், சிவாஜி

அதனால அவரோட சேர்ந்து தேவர் பிலிம்ஸ் போறது, பார்க்குறதுன்னு 5 வருஷம் டைரக்ஷனுக்கு என்னை இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். நான் எவ்வளவு பெரிய கலைஞன்… நடிகன் என்னை நடிக்க வைக்கலையே. நான் நடிச்சிருந்தா எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் பாராட்டி இருப்பாங்க. ‘யார்றா இவன்’னு மிரண்டு போய் வீட்டுக்கு என்னை அழைச்சி டின்னர் வச்சிருப்பாங்க.

கற்பனை

‘ஹாலிவுட் லெவல்ல படம் பண்ணிருக்கான்… இந்த மாதிரி எல்லாம் நாங்க நடிக்கலையே… நீ நடிச்சிட்டியே’ன்னு சொல்லி பாராட்டிருப்பாங்கன்னு ஒரு கற்பனை. ‘என்னையே தூக்கிட்டியேடா… நான் நடிக்கிறேன் பாரு. உன்னோட டைரக்ஷன்லயே’ன்னு இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த நேரம் பாரதிராஜா வந்துட்டாரு.

கன்னிப்பருவத்திலே – அச்சமில்லை அச்சமில்லை

அவரோட சான்ஸ் கேட்டு ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் நடிச்சேன். அப்புறம் 84ல அச்சமில்லை அச்சமில்லை படத்துல என்னை நடிக்க வைச்சாரு பாலசந்தர் சார். என்னை உயர்த்தி விட்டவரு அவருதான். எங்க பரம்பரையே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v