latest news
பாட்டு ஹிட்டாக இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்ல.. இளையராஜாவுக்கு உரைக்கிற மாதிரி சொன்ன வாலி
Published on
நான் இந்த வயதில் பொய் பேசக்கூடாது. அப்போ அந்த வயதில் பேசி இருக்கீங்களா என்று கேட்டால் பொய் பேசவில்லை என்றால் வேலையே கிடைக்காது. உண்மையைச் சொன்னால் ஒரு பையன் வேலை தர மாட்டான். கண்ணதாசன் சொன்ன பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது .வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறவில்லை.
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீ ஒரு பாட்டு என்ன பிரமாதமாக எழுதி இருந்தாலும் அதற்கு என்ன பிரமாதமாக இசையமைத்திருந்தாலும் என்ன பிரமாதமாக ஒரு பாடகரோ பாடகியோ பாடி இருந்தாலும் நான் எந்த கோயில் கோபுரத்தின் மீது ஏறி சத்தியம் செய்து சொல்லுவேன் .அது ஒரு டைரக்டரின் பிக்சரைஷேசனால்தான். அதனாலதான் வெற்றியடைகிறது.
இது இந்த கால மியூசிக் டைரக்டர்கள் எல்லாம் புரிந்து கொள்ளவில்லை. அதுக்கு மீறி சொன்னால் கடிந்து கொள்கிறார்கள். இயக்குனரின் பிக்சரைசேஷனால்தான் அந்த படம் நிற்கும் என கவிஞர் வாலி பழைய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இது சம்பந்தமான பிரச்சனை தான் சமீப காலமாக தமிழ் சினிமா எதிர்கொண்டு வருகிறது .அதுவும் குறிப்பாக இளையராஜா காப்பிரைட்ஸ் என்ற ஒரு பிரச்சனை தான் அவரின் பாடல்களை நாம் பயன்படுத்தும் பொழுது என் அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்கிறார்.
இன்னொரு பக்கம் எனக்கு இந்த தெனாவட்டு இருப்பதில் என்ன தவறு. எனக்குத்தான் திமிரு இருக்க வேண்டும் என்றெல்லாம் பல மேடைகளில் பேசி இருக்கிறார். என்னால் தான் அந்த பாடலே ஹிட் ஆனது. என் பாடல் ஹிட் ஆகவில்லை என்றால் அந்த படமே ஓடி இருக்காது என்றெல்லாம் அவர் கூறியதாக பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் கவிஞர் வாலியே ஒரு மேடையில் ஒரு பாடலோ பாடல் வரிகளோ, ஹிட்டாகிறது என்றால் அதற்குப் பின்னணியில் ஒரு மூல காரணமாக இருப்பது இயக்குனர் தான். அதை இந்த கால மியூசிக் டைரக்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசியிருக்கிறார். இதை அப்படியே இளையராஜாவின் பக்கத்தில் டேக் செய்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Kaur: கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தபோது 10 குழந்தைகள், 7 பெண்கள் உள்ளிட்ட...
Vijay TVK: கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் நிருபர் கேள்வி கேட்டார். இந்த மாதிரி நடந்துவிட்டது....
கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்....
Vijay TVK: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எட்டு பேர் கொண்ட குழு இன்று கரூருக்கு சென்று ஆய்வு செய்ய...
SAC: சினிமாவிலும் சரி, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் சரி விஜய்க்கு வழிகாட்டியாக இருந்தவர் அவரின் தந்தை எஸ்.எ.சந்திரசேகர். சினிமாவில்தான் நடிப்பேன் என...