Categories: latest news throwback stories

இயக்குனர் சொன்ன காமெடி… வேண்டா வெறுப்புடன் நடித்த வடிவேலு கிரேட் எஸ்கேப்!

அரசு, கம்பீரம், நம்நாடு, சபரி என பிரபல படங்களை இயக்கியவர் சுரேஷ். மகாராஜன், தரணி, லிங்குசாமி போன்ற பெரிய பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றியவர். இவர் வைகைப்புயல் வடிவேலு இந்தப் படத்தில் நடித்தது குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

விவேக்: அரசு பக்காவான கமர்ஷியல் படம். நல்ல காமெடி. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டருன்னு சொல்ற காமெடி இதுலதான் வரும். படத்துல வடிவேலு. நான் ஒர்க் பண்ணினது எல்லாம் விவேக், கவுண்டமணி, செந்தில் உடன் ஒர்க் பண்ணிருக்கேன். முதல்ல விவேக்குக்கு எழுதுனேன். அவரு முழு படத்துக்கும் கொண்டு வரச் சொன்னாரு. அதுக்கு சான்ஸ் இல்ல. செகண்ட் ஆஃப் சீரியஸா போகும்னு சொன்னேன். அதனால அவர் மறுத்துட்டாரு.

வடிவேலு: அப்புறம் வடிவேலுவைக் கொண்டு வந்தோம். ‘அவர் கருப்பா இருப்பாரு. அக்ரஹாரத்துக்கு செட்டாவாரா..’ன்னு தெரியலன்னு சொன்னாங்க. அப்புறம் அந்தமாதிரி ஆள்கள் இருக்காங்க. நல்லாருக்கும்னு வடிவேலுவுக்கு ரெகமண்ட் பண்ணினேன். அவருக்கு வந்த அன்னைக்கு டயலாக் சொல்லிக் கொடுக்குறேன். அவருக்குப் பிடிக்கல.

‘இது நல்லா இல்ல. என் ஆள்களை வச்சே எழுதிருப்பேன். எனக்கு டைம் கொடுங்க’ன்னாரு. நான் கதையோடு வர்ற மாதிரி காமெடி எழுதினேன். உடனே நடிக்கும்போது இது நல்லா இல்லன்னு சொன்ன வடிவேலு பக்கத்தில இருந்தவர்கிட்ட கேட்குறாரு. என்னப்பா உனக்கு சிரிப்பு வந்ததான்னு.

அவங்களும் வடிவேலுவுக்குப் பயந்துக்கிட்டு வரலன்னு சொன்னாங்க. உடனே சரத் சார்கிட்ட போய் சொன்னேன். அப்பவும் ‘இவரு படிக்கிறாரு. எனக்கு சிரிப்பு வரலயே. எனக்கு வரலன்னா பரவாயில்ல. பக்கத்துல உள்ளவங்களாவது சிரிக்கணுமே. அவங்களுக்கும் வரலயே.

சரத்குமார் ரெகமண்ட்: எனக்கு 10 நாள் டைம் கொடுங்க. நான் என் ஆளுங்களோடு சேர்ந்து எழுதிட்டு வர்றேன்’னாரு வடிவேலு. அப்புறம் சௌத்ரி சார் டென்ஷன் ஆகிடுவாரு. எனக்கு இது பர்ஸ்ட் படம்னு சொன்னதும் சரத் சார் திரும்பவும் வடிவேலுவிடம் ‘நீங்க நடிங்க. நல்லா இல்லன்னா சௌத்ரி சார்கிட்ட சொல்லி ரீஷூட் பண்ணிடுவோம்’னாரு. அப்புறம் வடிவேலு வேண்டா வெறுப்போடு நடிச்சாரு.

எண்ட் ஷாட் எடுக்குறேன். அவரு பைக்ல ஏறி எஸ்கேப்னு சொல்வாரு. அப்படி சொல்லிட்டு பைக்ல இருந்து இறங்கி கார்ல ஏறி அப்படியே ஊருக்குப் போயிட்டாரு. விட்டாப் போதும்கற மாதிரி போயிட்டாரு. எனக்குப் பதறுது. மானிட்டர் பார்க்குறதுக்கு முன்னாடி போயிட்டாரு. நான் ஷாக் ஆகிட்டேன்.

போகும்போது காலைத்தூக்கி டென்ஷன்ல போனாரு. அது ஸ்பாட்லயே பண்ணினாரு. அவருக்கிட்ட என்ன பிளஸ்னா கோபத்தைக் கூட எங்கிட்டதான் காட்டுனாரு. நடிக்கும்போது காட்டல. நல்லா நடிச்சிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. அப்புறம் டப்பிங்ல 2 மணி நேரத்துல வர்றேன்னு சொல்லிட்டுப் போனாரு. எனக்கு ஷாக் ஆகிட்டு. திரும்ப வந்தாரு. முதல் ரீல் பார்த்தாரு.

வேற ஸ்டைல் காமெடி: பின்னாடி என்ஜினீயர்ஸ் எல்லாரும் இருந்தாங்க. அவங்களாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பின்னாடி திரும்பிப் பார்த்தாரு. ‘இது நல்ல வேற ஸ்டைல்ல இருக்குல்ல…’ அப்படின்னு இன்ட்ரஸ்ட் எடுத்து 7 மணி நேரம் டப்பிங் பேசினாரு. அடுத்து கம்பீரம் படம் பண்ணும்போது என் பேரைச் சொன்னதும் டேட் கொடுத்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v