Categories: latest news throwback stories

யோகிபாபு, சூரி நடிப்பு எப்படி? வடிவேலுகிட்ட கேட்டா இப்படியா கலாய்ப்பாரு?

தமிழ்த்திரை உலகில் மீம்ஸ் கிரியேட்டர்னா அது வடிவேலு தான். எங்கே எந்த சம்பவம் நடந்தாலும் அதுக்கு அவரது டயலாக் போட்டு மீம்ஸ் போடுவாங்க. அப்படி நிறைய மீம்ஸ்கள் வந்துருக்குன்னா அதுக்குக் காரணம் வடிவேலுவின் படங்கள்தான்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: மனுஷன் பேசுற ஒவ்வொரு டயலாக்குமே டிரெண்டிங்தான். செல்போன் இல்லாத காலகட்டத்துலயே அவ்ளோ காமெடியை அள்ளி வீசிட்டாரு. இவர் வாயால் தான் அடுத்தடுத்த படவாய்ப்புகளும் வராமல் பெரிய கேப் விழுந்தது. அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் மீண்டும் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. அப்போது நடந்த படவிழாவில் வடிவேலுவிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டபோது அவர் சொன்ன பதில்தான் இவை.

யோகிபாபு, சூரி: வடிவேலுக்குப் பிடிச்ச நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன். அதே நேரம் யோகிபாபு, சூரி எல்லாம் நல்லா நடிக்கிறாங்களான்னு நிருபர் ஒருவர் வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு ‘ஆஹா… ஏழரையை இழுக்குறதுக்குன்னே வந்துருக்கீங்க.

சரி அடுத்து நெக்ஸ்ட்டு’ன்னு கேட்டார். அவங்களோட நடிப்பு எப்படி இருக்குன்னு கேட்கவும் ‘நல்லாருக்கு’ன்னு சொன்னார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘அவர் பதில் அளிக்கும் முறையைப் பார்த்தாலே இன்னும் திமிர் அடங்கவில்லை என்பதையே காட்டுகிறது’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.

2022ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார். படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

விடுதலை – மண்டேலா: வடிவேலுவிடம் யோகிபாபு, சூரி குறித்து கேள்வி எழுப்பும் போது சூரி விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருந்தார். அதே போல யோகிபாபுவும் மண்டேலா படத்தில் வெற்றிகரமாக கதாநாயகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

பேய் மாமா, பன்னி குட்டி, பொம்மை நாயகி, யானை முகத்தான், லக்கிமேன், தூக்குதுரை, பூமர் அங்கிள் ஆகிய படங்களில் கதாநாயனாக நடித்துள்ளார். வடிவேலுவோட ரியாக்ஷனைப் பார்க்கும் போது ‘காமெடியனா நமக்குப் பிறகு வந்தவங்க எல்லாம் நம்மை மாதிரி ஹீரோவா ஆகிட்டாங்களே’ என்ற கடுப்பால கூட இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v