latest news
வைசாக்ல பிரியாணி நல்லாருக்குமாமே… சூர்யாவால் கடுப்பான இயக்குனர்!
Published on
சூர்யா சினிமாவுக்குள் நுழையும் முன்னர் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தார். அவரை அழைத்து வந்து படம் நடிக்க வச்சா எப்படி இருக்கும்? அப்போ நடந்த சம்பவங்கள் என்னென்ன? அதற்கு முன் விஜயைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்டாரா சூர்யா போன்ற தகவல்களை எல்லாம் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
விஜய்க்கு செந்தூரப்பாண்டி படத்துக்கு முன்னாடி வரைக்கும் அவரோட அப்பா எஸ்ஏசி தான் படங்கள் இயக்கினார். அப்போ பல படங்கள் வந்தன. ஆனால் அதுக்கு பல நெகடிவ் விமர்சனங்கள்தான் வந்தன. விஜய் ஒரு படத்துல மாமியாருக்கு சோப்பு போடுவாரு. பிளே பாய் கேரக்டர்ல தான் பெரும்பாலும் நடிச்சாரு.
இதனால விஜய்க்கு நடிக்கவே தெரியாதுன்னு எல்லாம் சொல்லிட்டாங்க. அதனால விஜய் அப்பா எஸ்ஏசி. என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தாரு. அப்போ அவரோட நல விரும்பிகள் விஜயகாந்த் தான் இதுக்கு சரியான ஆளு. அவரு கூட விஜய் சேர்ந்து நடிச்சா நல்லா பிக்கப் ஆகிடுவாருன்னு சொல்லிருக்காங்க.
அப்போ விஜயகாந்த் ரொம்ப பீக்ல இருந்தாரு. ஆனாலும் தயங்கி தயங்கி கால்ஷீட் கேட்க, எஸ்ஏசிக்கு 13 நாள் கால்ஷீட் கொடுத்தாராம் விஜயகாந்த். அவருக்காக எஸ்ஏசி கதை எழுதிய படம்தான் செந்தூரபாண்டி. அந்தப் படம் தான் விஜய்க்கு கைதூக்கி விட்டது. அதைப் பார்த்து விட்டு சூர்யாவோட தந்தை சிவக்குமார் யோசிச்சிருக்காரு. சூர்யாவுக்கு நடிக்க வரலை. சூர்யாவுக்காக விஜயகாந்த் நடித்த படம் பெரியண்ணா. அது தோல்வியும் அல்ல. பெரிய வெற்றியும் அல்ல.
ஆரம்பத்துல எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை பார்த்தவரை டைரக்டர் வசந்த் சினிமாவுல நடிக்க வச்சிருக்காரு. நிறைய காட்சிகள் ரீடேக்லாம் ஆச்சுதாம். விசாகப்பட்டினத்துல ரொம்ப பரபரப்பா சூட்டிங் போய்க்கிட்டு இருந்ததாம். அப்போ வசந்த்கிட்ட வந்து சூர்யா விளையாட்டுத்தனமா ‘வைசாக்ல பிரியாணி சூப்பரா இருக்குமாமே’ன்னு கேட்டாராம். அதைக் கேட்டதும் வசந்த்துக்கு வந்த டென்ஷன்ல 500 பேருக்கு முன்னாடி சூர்யாவைத் திட்டித் தீர்த்தாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
OTT: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் பல மொழி படங்களின் இந்த வார அதிகாரப்பூர்வ லிஸ்ட் குறித்த தகவல் வெளியாகி...
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...