Connect with us

latest news

இட்லி கடை பிரச்சனை… கலைஞர் தீர்ப்பு… விஜயகாந்த் எங்கயோ உண்மை அந்தப் பக்கம்தான்!

எனக்கு சென்னையில யாரையும் தெரியாது. எனக்கு வந்து விஜயகாந்த் அண்ணன் மாதிரின்னு சொல்றாரு ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ். அதே நேரம் விஜயகாந்த் எப்படி சொன்னாருன்னா ‘அரவிந்த் என்னை அண்ணன் மாதிரின்னு சொன்னாரு. ஆனா

நான் அவரை தம்பி மாதிரின்னு சொல்லல. தம்பி தான். என் தம்பிக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தா நான் என்ன முடிவை எடுத்திருப்பேனோ அதைத் தான் செஞ்சேன்’ என்கிறார் விஜயகாந்த். அப்படி என்னதான் பிரச்சனை? விஜயகாந்த் என்னதான் செய்தார் என இயக்குனர் அரவிந்தராஜ் இப்படி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

புதுசா திறந்துருந்த ஹோட்டல், சாப்பிடப் போயி பிரச்சனை ஆகிடுச்சு. அவங்க என்ன சொல்றாங்கன்னா டைரக்டர் வந்து தகராறு பண்ணிட்டாரு. எனக்கு டிரிங்ஸ் பழக்கமே கிடையாது. கேப்டனுக்கும் தெரியும். ‘சாமியாரப் போய் கேட்குறீங்களே’ன்னு அவரும்ய சொல்வாரு. நைட் 11 மணிக்கு போன் அடிக்கிறேன்.

சரி. அவரு படுத்துக்கிட்டாருன்னு அப்புறம் பண்ணல. மறுநாள் காலைல அந்தப் பார்ட்டிகள் இவர் ஏன் கேப்டனுக்குப் போன் பண்ணினாருன்னு அவரைப் போய் பார்த்துருக்காங்க. என்ன பிரச்சனைன்னு கேப்டன் கேட்டாரு. இந்த மாதிரி ஊமைவிழிகள் டைரக்டர் பிரச்சனை பண்ணிட்டாருன்னு சொல்றாங்க

aravindraj

aravindraj

‘யாரு அரவிந்த் சாரா…’ன்னு கேப்டன் கேட்டு ‘டைரக்டருக்குப் போன் போடு. யாருன்னு கேளு’ன்னு சொல்றாரு. அப்புறம் வந்து பேசுனவரு காம்பிரமைஸ் ஆகிட்டாரு. அப்புறம் விஜயகாந்த் ‘நீங்க பொய் சொல்றீங்க. அவரைப் பத்தி எனக்கு தெரியும். நீங்க வெளியே போங்க’ன்னுட்டாரு. எனக்குப் போன் போட்டாரு. ‘நீங்க எங்கே இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாரு.

கேட்க மாட்டீங்களா, எங்கிட்ட சொல்ல மாட்டீங்களா? இவ்ளோ தூரம் பிரச்சனையா இருக்கே? அவங்க போலீஸ் வரை போயிருக்காங்க. எப்படி நீங்க சொல்லாம இருந்தீங்க’ன்னு கேட்டார். அது சின்ன பிரச்சனையா இருந்து சிஎம் லெவலுக்குப் போனது. சாதாரணமா இட்லி சாப்பிட்ட பிரச்சனை இப்படிப் போகுது. அப்போ வந்து கலைஞர் அய்யா சிஎம்மா இருக்காரு.

அவரு காதுக்குப் போனதும் என்னை பிரச்சனைன்னு கேட்டுருக்காரு. இப்படி வந்து படத்தோட டைரக்டர் எங்கிட்ட பிரச்சனை பண்ணிட்டாரு. அவருக்கு விஜயகாந்த் சார் தான் சப்போர்ட்டா இருக்காருன்னு சொல்றாங்க. ‘விஜயகாந்த் சார் சப்போர்ட்டா இருக்காரா’ன்னு கலைஞர் கேட்டாராம். ‘விஜயகாந்த் ஒரு இடத்தில் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறாருன்னா உண்மை அந்தப் பக்கம்தான் இருக்கு.

நீங்க வேணா பேசுங்க. நான் விஜயகாந்துக்கிட்ட சொல்லி பிரச்சனையை காம்ப்ரமைஸ் பண்ணச் சொல்றேன்’னாரு. என்ன பிரச்சனைன்னு கேட்காமலேயே தீர்வை சொல்றாரு. அந்தப் பிரச்சனை உடனே சரியாயிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in latest news

To Top