Categories: latest news throwback stories

விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை சரி செய்த விஜயகாந்த்!.. பெரிய மனசைப் பாருங்க!..

1979ல் இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார் விஜயகாந்த். எந்த சினிமா பின்புலமும் இல்லாத விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கணும்கற ஆசையில தான் சினிமாவுக்குள்ள வந்தாரு.

ஆனா முதல் படத்துல அவருக்கு வில்லனா நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் 600 ரூபாய் தான். இதன்பிறகு அவர் கதாநாயகனா நடிச்ச ஒரு சில படங்கள் தோல்வி தான்.

1980ல தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் ஹீரோவா நடித்து பெரிய வெற்றியைக் கொடுத்தார் கேப்டன். இந்தப் படத்தில் அவரது சம்பளம் ரூ.2000. தொடர்ந்து 10 வருஷமாக 70 படங்களுக்கு மேல நடித்து வெற்றிகளைக் குவித்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.30 லட்சமானது.

அப்போ ரஜினி, கமலுக்கு டஃப் கொடுக்குற வகையில தன்னோட தனி பாணி நடிப்பால முன்னுக்கு வந்தார் விஜயகாந்த். ரஜினிக்குப் பிறகு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவரும் இவர்தான். இவரது நண்பரான ராவுத்தர் அவருடைய பெயரிலேயே ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். வரும் வருமானத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

2004ல் வெளியான கஜேந்திரா படத்திற்கு விஜயகாந்த் வாங்கிய சம்பளம் 3 கோடி ரூபாய். படத்தில் நட்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து 1 கோடியை எடுத்து பிரிச்சிக் கொடுத்துருக்காரு.

இது மட்டும் அல்ல. இதுக்கு முன்னாடியும் தோல்வி அடைந்தால் அதை விஜயகாந்த் தான் விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து சரி செய்துள்ளார். பொதுவாக இந்த வேலையைத் தயாரிப்பாளர்கள் தான் செய்ய வேண்டும்.

அதற்கு விஜயகாந்த் சொல்ற பதில்தான் இது. ‘என்னோட முகத்தைப் பார்த்துத் தான் தயாரிப்பாளர் படம் எடுக்கிறாரு. என்னோட முகத்தைப் பார்த்துத் தான் விநியோகஸ்தர்கள் லட்சக்கணக்குல பணத்தைப் போட்டு படத்தை வாங்குறாங்க. அதனால என்னோட படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நானே சரி பண்ணிக்கிறேன்’. அப்படின்னு அவருடைய தோல்வி படத்துக்கு வர்ற நஷ்டத்தை சரி பண்ணி அதன்மூலமா வர்ற பிரச்சனைகளையும் சரி பண்ணிருக்காரு கேப்டன்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v